Tuesday, November 25, 2008

அன்பே வா!!!

சிந்திக்கும் மணித்துளிகள் எங்கேயோ தஞ்சம் புக
அன்பிற்கு வாழ்த்து மடல் வாசிக்க விரும்பி வேகமாகவே சென்று கொண்டிருக்கிறோம்,

உணவகத்தின் கல்லா பெட்டியின் அருகில் அன்பு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது,
எப்போதெல்லாம் எங்கோ முகம் தெரியாமல் தவித்திருக்கும் ஜீவன்களின் பசிக்கு நாம் உதவ,
தேடி பார்க்கும் அந்த சில்லறைகள் கிடைக்கும் போது
அன்பிற்கு இன்னொரு பிறவி வழங்கி வாழ்வின் வேகத்தில் மறைகிறோம்,

எப்பொழுதெல்லாம் தூங்க படுக்கும் போது உறக்கம் பிடிக்க நேரம் ஆகிறதோ அப்போதெல்லாம்,
சாலையில் எவ்வளவு பேர் உறக்கம் தொலைக்கின்றனர்
அவர்களின் உறக்கத்திற்கு வழி செய்ய வேண்டும் என்று மறு நாள் ஏதோ ஒரு வழியில் உதவி செய்தோம் என்றால்
அப்போதெல்லாம் அன்பிற்கு மறு பிறவி கொடுக்கிறோம் மண்ணுக்கும் மனதுக்கும் தெரியாமலேயே,

சோற்று பருக்கையின் அருமை மறந்து,
ஏன் சோற்றையே மறந்திருக்கும் இந்த தருணத்தில்,
இருளுக்கும் வெளிச்சம் உண்டாக்கும் பார்வை அற்றோர் பள்ளியில்
அந்த குழந்தைகள் பருக்கை மீதம் இல்லாமல் சாப்பிடும் போது,
மனது கனத்து திரும்புகிறோமே அங்கேயும், அன்பிற்கு இல்லை அடைக்கும்தாழ்,

அன்பு அழைக்கப்பட வேண்டிய விருந்தினர் இல்லை,
விருந்து படைக்கப்பட வேண்டிய நாட்டின் அங்கம்,
அன்பிற்கு விருந்து படைப்போம், அன்பிற்கு ஆழமாய் அன்பை அளிப்போம்....

பின் குறிப்பு - நம்மால் இயன்ற உதவியாய் இந்த சமுதாயத்துக்கு அளிக்க தயங்க தேவை இல்லை, அதற்கு தலையங்கமும் தேவை இல்லை....

- MJV

Thursday, September 4, 2008

மனைவி - பாகம் இரண்டு

மனைவி என்ற என்னுடைய முதல் பாகம் படிக்காத நண்பர்கள் அதை படித்து விட்டு இதை படிக்கவும்....
http://mjvs.blogspot.com/2008/08/blog-post_6540.html

இரண்டாம் அத்தியாயம் எழுத (வாழ) புறப்பட்டு இருந்த தருணங்கள் அவை,

நல்ல வேலை என் கண்கள் என் நினைவுகளை அள்ளி கொண்டு என்காதல் தேடும் பணிக்கு என்னை பணிக்கவில்லை,
இருக்கும் கணங்களை தொலைத்து விட்டு இறக்கும் தருணங்களில் தேட எனக்கு சம்மதமும் இல்லை,
ஆதலால் வேண்டாம் எனக்கு அந்த காதல் தொலைத்த தேடல்,

என் கண்மணியின் உணர்வு அலைவரிசையில் எப்போதும் என்நினைவலைகள் ஒலிக்கும்,
அதே போல் என் மன கண்ணாடியில் என்னவளின் காதல் ஓவியம்தான் எப்போதும் தடங்கல் இன்றி பிரதிபலிக்கும்,

நீ நான் என்ற அந்த ஒரு முக அழைப்புகள் இனி வேண்டாம்,
நாம் என்ற நெகிழ்ச்சி நீட்டிப்புகள் இனி இந்த இரண்டாம் அத்தியாயத்தை நிரப்பட்டும்,

பெருக்கெடுத்து ஓடும் காவேரி பார்த்து நாள் ஆகி போன வாழ்க்கையில் அன்பென்னும் ஆற்று வெள்ளம் நம் வாழ்வை அடித்து கொண்டு போகட்டும்,
அதில் ஆனந்த கூத்தாடுவோம், பேரின்ப பெருவெள்ளம் பார்த்து பெருமிதமடைவோம்,

எத்தனை நாளுக்குதான் அந்த இடைவெளியை சமத்துவம் பேச வைப்பது,
வா நாம் இருவரும் சேர்ந்து நம் இடைவெளிக்கு சமாதான புறாவை பறக்க விடுவோம்,
இடைவெளி சம்மதித்தால் சமாதானம்,
இல்லையேல் அந்த பாழை போன இடைவெளியை போருக்கு அழைத்து வெற்றி முரசு கொட்டுவோம்,

என்னடா இது இவனுக்குள் இப்படி ஒரு மாற்றம் என்று யோசிக்கிறாயா? தார்மீக அடிப்படையில் வெகு நாள் குடியிருந்தால் வீடும் கூட சொந்தமாம் நமக்கு,
அப்படி பார்த்தால் என்னை விட நீதான் என்னை உன் மனதில் அதிக காலம் சுமந்துள்ளாய்,
ஆதலால் உன்னில் குடியேறுகிறேன் புது வீட்டின் பொலிவோடு,
இனி அத்தியாயங்கள் தேவை இல்லை,
இந்த அத்தியாயம் முடியும்போது நான் காலனிடம் என்னை மேலே சேர்க்கும் பயண சீட்டை சரிபார்த்து கொண்டிருப்பேன்....- MJV

Friday, August 29, 2008

சரவணா என்றொரு நண்பன்,...

இன்னொரு விடுதலை

காலாற நடந்து காற்று வாக்கில் கால்நடைகளை பரிகாசம் செய்து
வீடு வந்து சேர்ந்த அனுபவம் உண்டா உங்களுக்கு,
எனக்குமுண்டு அது போன்ற அனுபவம்,
பசுமை கொஞ்சி விளையாட தாத்தா பாட்டியின்
அன்பின் அரவணைப்பில் பழைய வீடானாலும்
புதுமையான அன்பின் அரிச்சுவடி தேடி பார்த்த நினைவுகள் உண்டா,
காசு பார்க்க விதவிதமாய் கணினியிடம் வேண்டுகோள் விடுத்து
காலை கதிரவனை மறந்து போய் மாலை நிலவை யாரென்று கேட்டு
மறுபடி காலை அலைபேசியை எழுப்பி விட பணித்து விட்டு
காலையில் அதனையே திட்டும் முக்கால்வாசி எந்திரமான
ஒருவனின் பசுமை தேடும் அழைப்பிதழ் இது.

வந்து விடுங்கள் மறக்காமல் எல்லோரும் செல்வோம்
நம் கவலை மறக்க செய்யும் ஊருக்கு....

கணினி மறந்து கோடிங் மறந்து இனிமையாய் வாழும்
மண்ணின் மைந்தர்களை பார்க்க,
அவர்களோடு வாழ்ந்து பார்க்க....

புகைப்படம்

நிகழ்வுகளை பதிவு செய்யும் படம் இது
பண்பான நிகழ்வுகளையும் பதிவு செய்யும் படம் இது,
புகையாய் மேகத்தில் கலக்கும் உடல்கள்,
என்பதால் தானோ என்னவோ,
வகையாய் அதை பதிவு செய்து
புகைப்படம் என்பார்கள்,

ஓவியனின் கலைநுட்பம், திறமையின்
திறவுகோளாய் அவன் ஓவியத்தில்,
நினைவுகளின் சங்கமம் மறக்க முடியாத
பதிவுகளாய் இந்த புகைபடத்தில்,

தாயின் அன்பு அளக்க கருவியின் உதவி
நாடினால் அவன் பைத்தியக்காரன்,
பல மைல்கள் தாண்டி மகன் வாழ்ந்தாலும்
பேரனை பதிவு செய்து காட்டியதால் இந்த புகைப்பட
நண்பன் ஒரு வித்தைக்காரன்,
ஆயிரம் வார்த்தைகள் பேசி கொண்டால்
அது ஒலியின் ஊடகம்,
ஒரு புகைப்படம் பல்லாயிரம் வார்த்தைகள் பேசுமே,
என்னவளின் புகைப்படம் பல்லாயிரம் வார்த்தைகள் பேசுமே
அது ஒரு காதலின் மௌன விவாதம்,
புகைப்பட நண்பனே நீ வந்ததும் என் நேர்காணல்கள்
மறந்து போக வில்லை,
மாறாக நீ வந்ததும் என் நேர்காணல்கள் பதியம் போடப்பட்டன,
நினைவின் மரமாய் வாழ வளர...

ஜூலை 16 - கருப்பு தினம்

அந்த தெருவை எத்தனை முறை கடந்திருக்கும்
என் கால்கள்,
அத்தனை முறையும் பிஞ்சு குழந்தைகளின் கொஞ்சும் மழலை
என்னை ஆர்பரிக்க செய்திருக்கின்றன,
இப்பொழுதும் எங்கள் ஊருக்கு பயணப்பட்டால் ஒரு முறையேனும்
அந்த தெருவின் வழி செல்கிறேன்,

பிஞ்சி குழந்தைகளின் உயிரும் உணர்வும் அங்கே இருந்து
என்னை கேட்கின்றன,
அண்ணா இவ்வளவு அன்புக்கும் நாங்கள் தகுதி இல்லையா?
எங்களை மட்டும் ஏன் சீக்கரமாய் வழி அனுப்பிவிட்டீர்கள்,
தர்மத்தின் வாழ்வை சூது கவ்வும் என்று சொல்லி கொடுத்தீர்கள்,
இன்று தர்மமே இந்த தீயின் வாயிலில் வெந்து விட்ட வேதனையை
எங்கே போய் சொல்லுவது?
சில மனிதர்கள் செய்த தவறுக்கு தீயும் உடந்தை ஆனது
இந்த திரு குடந்தையில்,
சுற்றி சுற்றி இழுத்து சுட்டது எங்களை...

பஞ்ச பூதமும் கடவுள் என்றதெல்லாம் பொய்தானே?
எங்களை பூத உடலாக்கியதும் இந்த பஞ்ச பூதத்தில் ஒன்றுதானே...
மன்னிக்கவேண்டும், மனிதர்களின் மரமான நெஞ்சிக்குள் எங்களுக்கும்
இடம் உண்டாம்.....
யாருக்கு வேண்டும் அந்த இறுதி மரியாதை....
இனியும் நாங்களே இங்கே மீண்டும் பிறப்போம்,
அப்போதாவது எங்களை வாழ விடுங்கள்....
வசந்தங்கள் வரும் இங்கே கண்டிப்பாய் நாங்களும்
வருவோம்....
என்றது அந்த பிஞ்சி மழலையின் ஆன்மா....

வளையல்

வாழ்வு தொடங்கும்போது அர்ச்சிக்கப்பட்டு வாழ்வு
முடியும்போது தெருவின் ஓரத்தில் தூக்கி எறியப்படும்
நீயும், இங்கே தீர்ப்புகளில் தீயாய் எரியும் அரசு பேருந்தும் ஒன்றுதான்,

உயிர் மலரும்போது உன்னை வைத்து விழா எடுப்போம்
உயிர் விலகும்போது உனக்கு மரண தண்டனை கொடுப்போம்
என் வழக்குக்கு மட்டும் விசாரணை இல்லாத தண்டனையா
அலறும் உன்னை மிதித்து தாண்டி மார் தட்டுகிறது ஒரு கூட்டம்,

மழலைகள் தாயிடம் பேச ஊடகம் கொடுத்த நீயும்
ஒரு ஐன்ஸ்டீன் தான்,
பல கண்டுபிடிப்புகள் வருமுன்னே வந்த அறிவியல் விந்தையே,

உன் மரணதண்டனைகளை இந்த சமூகம் மறக்கட்டும்,
உன்னால் பெண்மைக்கு பெருமையா இல்லை பெண்ணால்
உனக்கு பெருமையா?

தெரியவில்லை எனக்கு,
என்று உன் மரணதண்டனைகள் மறுதலிக்க படுகின்றனவோ
அன்று நான் இசைப்பேன் உனக்கான தேசியகீதம்.

மனைவி

எத்தனை முறை என்னிடம் தோற்றாலும் என் வெற்றியில்
களிப்புறும் நீதான் என் வாழ்க்கை மாற்றி கொடுத்த சிற்பி…
உலகம் நாடக மேடை என்றால் அதில் உனக்குத்தான் எத்தனை
வேடங்கள் அது எல்லாமே நான் படிக்கும் வேதங்கள்.
காதலில் விழுந்த போது கண்ணிமைகளில் என்னை சிறை எடுத்தாய்,
கண்ணியமாய் பெற்றோருடன் கலந்து ஆய்ந்தால் தான் திருமணமும்
மணக்கும் என்றாய்,
இனிய நாளில் கை பிடித்தோம், இனிமையாய் காலம் கடந்தது,
நீயோ நெடுந்தூர முக மலர்ச்சியில் என் நாளை புதுப்பித்தாய்.

உன்னை என்னவளாக்கிய பின் மறந்தே போனேன் காதலை,
கேட்டால் என் கடிகார முட்களில் நேரம் அதிகம் இல்லையே என்றேன்,
நான் பார்க்கும் மட்டை பந்தாட்டம் என்னை மரகட்டை ஆக்கிய
மர்மம் எனக்கு புலன்படவில்லை,
உன் விழியோர பார்வையின் ஏங்குதல் மறந்தேன்,
உன் கை பற்றி நடக்கும் பாதைகள் மறந்தேன்,

இப்போது எனக்கு புலப்பட்டது உன் விழியோர ஈரம்,
அதில் நீ எனக்கு சொன்னது என் மனதில் ஏறும்.
யோசித்து பார்த்தால் நீ என் உலகத்தின் ஆணி வேர்.
புரிந்து போனது என்னவளே நான் ஒரு ஈர சருகல்ல,
நீ தாங்கி நிற்க உன்னால் செழிப்படைந்த அரசமரம் ,
ஆதலால் வா நாம் களிப்புற்ற நாட்களுக்கு மீண்டும்
பயணப்படுவோம்,
நீ எனக்கானவள் நான் உனக்கானவன் என்ற விஷயத்தை மீண்டும்
ஒரு முறை என் மனதில் உரக்க சொன்னவளே வா இப்போதே
புறப்படுவோம் நம் காதலின் இரண்டாவது அத்தியாயம் எழுத....

கல்லூரி காதல் (கல்லூரியிடம்)

கனவுகளின் கர்ப்பகிரகமாய் உன்னில் நங்கள் எல்லோரும்
பிரவேசித்தோம்,
கனவு, நட்பு, காதல், கோபம், கல்வி என்று எத்தனை பாடங்கள்
எடுத்த ஆசிரியர் நீ,
உன்னிடம் மட்டும்தான் மதிப்பெண்களை அள்ளி அள்ளி எடுத்துகொண்டோம்,
நீயும் அசராமல் மதிபெண்களை அள்ளி தந்தாய்.

கல்லூரி செல்லாமல் இருக்க எப்படி இவர்களால் முடிகிறது என்று
யோசித்து யோசித்து உன்னை காதல் செய்தோம்,
உனக்குதான் எத்தனை காதலர்கள் பொறாமை பட்டது
காதல்.
உன் கடைக்கண் பார்வையில் உலகம் அறிந்தோர் எத்தனை பேர்,
உன்னை கட்டிக்கொண்டு பாடல் புனைந்தோர் எத்தனை பேர்,
நீ கற்று கொடுத்த பாடத்தால் உயர்ந்து உன்னை மறக்கமுடியாமல்
அலைந்தவர் எத்தனை பேர்.
பட்டியலும் நீள்கிறது அதனால் பட்டயங்களும் நீள்கிறது,
இந்த கல்லூரி காதலிக்கு மட்டும்தான் எத்தனை காதலர்கள் வேண்டுமானாலும் இருக்கலாம்,
தட்டி கேட்க யாரும் இல்லை, தகுதி என்று எவருக்கும் இல்லை,

உன்னை பிரிந்து தத்தளிக்கும் பல ஆயிரம் பேரில் நானும் ஒரு
துரதிஷ்டசாலி,
இன்று உன்னை காண வந்தாலும் அதே இனிய புலாங்கிதத்துடன் என்னை வரவேற்பாய்,

என் இனிய கல்லூரி காதலியே உனக்கும் எனக்கும் உள்ள காதல்
மட்டும் என்னில் மரணமடைய மறுக்கிறது,
காலம் எல்லாவற்றிற்கும் இனிய மருந்தாம், உன்னில் நானும் என்னில்
நீயும் கலந்து கிடந்த நாட்கள் மறந்தால்,
இந்த கல்லூரி காதலனின் மரண ஓலை எழுதபட்டிருக்கும்,
அது வரை இல்லை எங்கள் காதலுக்கு மறுப்போ இல்லை மரணமோ....

இன்னொரு பெண்

பெண்மையின் மேன்மை பேசும் போது உண்மையில்
உண்மைகள் சில நேரங்களில் அஸ்தமனம் ஆகின்றன,

வாழ்வின் பொருள் அர்த்தம் விளங்க வைத்த பெண்
என் அம்மா,
வாழ்வில் என்னுடைய வல்லமை ஆளுமை காதல் உணரவைத்த பெண்
என் மனைவி,

இப்படி ஆதிக்க ஆடல்களில் தான் நானும்
திளைத்து வந்திருக்கிறேன் இவ்வளவு காலம்,
இன்று என் மனைவிக்கு கண்மணிகளில் ருத்ரதாண்டவம் கண்டேன்,
கேட்டால் காரணம் நான் இன்னொரு பெண்ணை கூர்ந்து
நோக்கி அவளை மறந்து விட்டேனாம்,

மறப்பதும் மறக்கபடுவதும் தான் இனிமேல் புதிய விதி
அதை எந்நாளும் உன் மனதில் வைத்து படி என்றேன்,
நெருப்பு நீராய் மாறி பார்த்துண்டா,
நான் கண்டேன் என்னவளின் கண்களின் நெருப்பு கண்ணீராய்
அவள் தாடைகளில்,

நான் சொன்னேன் அடி பைத்தியக்காரி இந்த நீர் நெருப்பு விளையாடல்
வேண்டாம்,
நான் கூர்ந்து நோக்கியது நம் தேவதையை, நம் மழலையை என்றேன்,
உடனே இன்னொரு ரசாயன மாற்றம் என்னவளிடம்,
எத்தனை முறை என்னை ஏமற்றியிருப்பாய் என்னை,
உனக்கு நானும் நம் மழலையும் கொடுத்த
சுகமான சுமை தான் இது என்றாள்,

அதை கேட்டு என்னை பார்த்து ஆர்பரித்து சிரித்தாள் அந்த
இன்னொரு பெண் எங்களுடைய செல்ல மகள்.

மகள்!!!

எத்தனை முறை நானும் என்னவளும் எங்கள் கனவுகளில் வண்ண தூரிகை கொண்டு வரைந்திருப்போம்,
அத்தனை முறையும் உன் முகம் வரையும்போது மட்டும் அந்த பாழாய்ப்போன கைப்பேசி அதிகாலை அழைத்து கெடுத்துவிடும்,ஒவ்வொரு வரம் கடக்கும் போதும் கண்டு கேட்டு மகிழ்ந்த என்னவள் எனக்கு சொல்லி கொடுத்த கதைகள் பற்பல,

அதில் நாங்கள் கூட்டு முயற்சியாய் கேட்ட வரங்கள்நட்சத்திர பட்டாளத்தையே எண்ணிக்கையில் மிஞ்சி இறுமாப்பு காட்டும்,
எப்பொழுதெல்லாம் மற்றவர்கள் மழலை பிறந்த செய்தி சொல்லும்போதும் கற்பனை குதிரைகள் புதிய கால்கள் முளைத்து ஓடும்,

நாள்காட்டியில் வேகம் குறைந்தும் எங்கள் இதய துடிப்பில் வேகம் அதிகரித்தும் பயணித்த நாட்கள் அவை,
அந்த நாளும் வந்தது திரைப்பட தாக்கம் அதிகம் இருந்த எனக்குஎன்னவள் இருந்த அறைக்கு வெளியில் காத்திருந்த இரவில் என் கண்ணிமைகள் போராட்டம் நடத்தி தூக்கத்திற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிதிருந்தன கண்டிப்பான கண்ணிமைகள்,

ஐம்புலன்கள் என்று சொல்ல கேள்வி பட்டிருக்கிறேன் ஆனால்அவை அனைத்தும் உன் வரவை ஒருமித்து எதிர்நோக்கிய அதிசயம் கண்டு நயாகரா போல் வீழ்ந்து எழுச்சி கொண்டேன்,
மருத்துவர் அழைத்து என்னிடம் காட்டியது எங்கள் செல்ல மகளை மட்டும் அல்ல,எங்கள் வாழ்வின் பன்முக ஒருமைப்பாடையும் தான்...

கவிப்பேரரசு

உன்னை கவிதை கடவுள் என்று சொல்லி
ஒரு கோவிலில் பூட்டி வைக்க என் மனம்
விரும்பவில்லை,

எங்களை ஏளனம் செய்வதற்காகவே தமிழ் தந்த
கவிதை களஞ்சியமே,
எதைத்தான் நீ படைக்கவில்லை எதைத்தான் உன்
கவிதையில் நீ படிக்கவில்லை,

நயகராவை நீரின் எழுச்சி என்றாய்,
சொல்லின் அர்த்தம் ஏறாத எங்களுக்கு
புதிய அர்த்த அகராதி சொல்லி கொடுத்தாய்,
தோழிமார் கதையில் எங்களை இலவச கிராம
சுற்றுலா அழைத்து சென்றாய்,
மரங்களுக்கு உயிர் கொடுத்து எங்களை
மனிதனாக மாற்றினாய்,

பூகோல எல்லைகளை கடத்தி சென்று
பூக்களால் அர்ச்சனை செய்தாய்,
திரைச்சீலை மறைத்த காதலின்
புனிதத்தை தரையில் இருந்த எங்களுக்கும் தெளிவக்கினாய்,

ஏறுவோர் ஏறுக என் சிறகில் என்று கதை சொல்லி,
எங்களின் கிறுக்கான வாழ்க்கைக்கு கடிவாளம் பூட்டினாய்,

ஏடுகளில் ஏறாத வாழ்க்கை தத்துவத்தை உன் எழுத்துக்கள்
எங்களுக்கு கற்று கொடுத்தது,
கவியரசே காலங்கள் கடக்கும் உன் கவிதை,
தமிழ் வேண்டி நிற்கும் தமிழுக்கு வேண்டும் உன் சிந்தை செதுக்கும் கவிதை,

நீ என்ன கவிதையால் உயர்ந்து எங்களுக்கு நிழல் அளிக்கும்
அரசமரமா,
இல்லை உன்னால் உயர்ந்து நிற்கும் தமிழால் தமிழ்
உணர்வுக்கு சாகா வரம் கொடுக்க வந்த பாற்கடல் அமுதமா?

உயிரை உருக்கி தமிழுக்கு கொடுத்து பின்னர் உணர்வோடு
கணித்து பேசுவீர்களே இது என்ன இன்னொரு இடியா?
எது எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் உங்கள் கவிதை
கேட்டு வளர்ந்த எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் உங்கள் எழுதுகோல் முனையாக வாய்க்க....

அப்பா

என்னை வாசித்து சுவாசித்து உங்கள் பிராண வாயுவாய்என்னை ஆட்கொண்டீர்கள்,

நான் நடை பழக உங்கள் நடை தளர்த்தி கொண்டீர்கள்,ஏனென்றால் உங்கள் வேகத்தில் என் நடை தளரக்கூடாதென்று,

எப்பொழுதெல்லாம் நான் வீழ்ந்தேனோ அப்போதெல்லாம் நீங்கள் எழுந்து என்னை எழுச்சிக்கு இட்டு சென்றீர்கள்,

யாரேனும் தங்கள் தோல்வியில் ஆனந்த கீதம் இசைத்து பார்த்திருக்கிறீர்களா?

நான் பார்த்திருக்கிறேன் என் வெற்றியில் ஆனந்த பட்ட இரண்டாவது பிறவி நீங்கள்,

உங்கள் கோபங்கள் எல்லாம் அம்மாவின் சேலை தலைப்பில் தொலைந்து போகும் அங்கே என் முகம் கண்ட பின்!!!

நினைவிருக்கிறதா ஒரு முறை என் குறும்பை பொறுக்காமல் ஒரு அடி அடித்து விட்டீர்கள்,அழுகை என்னும் அசுரன் பிடியில் இருந்த என்னை வேலைக்கு செல்லாமல் திரும்பி வந்து காப்பாற்றினீர்கள்,

அன்று எனக்கு தெரிந்ததெல்லாம் நீங்கள் கொண்டு வந்து இனிப்பு பலகாரம் நன்றாக இனித்ததுதான்,

இன்று யோசித்தால் உங்கள் உள்ள காகிதம் எப்படி கிழிந்து போயிருக்கும் என்ற பலமான சிந்தனைக்கு நான் சொந்தக்காரன் ஆகின்றேன்,

மறுஜென்மம் என்றெல்லாம் பெரிய நம்பிக்கை இல்லை எனக்கு,ஆனால் அப்படி ஏதும் இருந்தால் நீங்கள் என் மகனாய் பிறக்க வேண்டும்,

அப்போது உங்களை சீரும் சிறப்புமாய் நான் கூட்டிச்செல்ல வேண்டும் வாழ்க்கை பயணத்தில்,இருப்பதை வைத்தே பழக்கப்பட்ட எனக்கு ஏனோ பறப்பதின் மேல் ஆசை,

அது போகட்டும் இப்போது உங்கள் இரண்டாம் குழந்தை பருவத்தில் உங்களை கையில் வைத்து தாங்க காத்திருக்கும் உங்கள் அன்பு மகன்....

கருக்(கொ)கலைப்பு

கள்ளங்கபடம் இல்லாத உலகமா இது என்ற தூர் எடுக்கும் கேள்விகள் வெகு காலமாக புறக்கணிக்க பட்டு வருகின்றன,

என் நலன், என் மக்கள், என் உறவினர் என்ற சுயநல வட்டத்தில்தான் அனைவரின் ஆயுட்காலமும் சிக்கி செதிலாகின்றன,

அப்படியாவது ஒரு சுயநல வட்டத்தில் என்னை சேர்த்து என்மரணதண்டனைக்கு மறுப்பு கூற மாட்டீர்களா?
கதறி அழுகின்றது, கார் மேகம் சூழ்ந்த மாலையில் இருவர்இன்புற்று கழித்த தருணங்களின் பதிவான அந்த குற்றமற்ற கரு,
கரு என்ற சொன்ன என்னை கழுவில் கூட ஏற்றலாம்,

அகண்ட இந்த பூமி பிரமாண்டத்தில் அனுமதி மறுக்கப்படும் ஒரு குழந்தையின் கதறல்,
உலக உயிரழப்புகள் கண்ணுக்கு தெரிந்ததால் அதற்கு குரல் கொடுக்கிறோம்,
உலக அனுமதி மறுக்கப்படும் இந்த பிஞ்சிகளின் கொலைக்குஏதேனும் தண்டனை உண்டா?

இருந்தால் சொல்லி தாருங்கள் உயிருக்கு உயிர் என்ற கொலைகள் நடந்தேறட்டும்,
அப்போதாவது இந்த உயிர் கொல்லிகளின் வெறியாட்டம் கட்டுக்குள் இருக்குமா என்று பார்ப்போம்,
இந்த கொலை செய்ய துணியும்போது இனி எங்கேயும் பஞ்ச பூதங்கள் உயிர் பெறட்டும்,
அறைக்குள் மட்டும் ஒரு சுனாமி பிரசவிக்கட்டும்,
கண்டங்கள் தாண்டி பூமி தட்டுகள் பிளந்து இவர்களை உள்வாங்கட்டும்,

இதை படித்து யாரேனும் ஒருவர் மனம் மாறினால் அப்போதுதான் இந்த கொலைகளின் முற்று புள்ளிக்கு எழுது கோல் முனைகள் தயாராவதாய் எண்ணி கொள்வோம்....

Monday, June 16, 2008

Strange Cricket...

ODI no. 2707
Kitply Cup - finalIndia v Pakistan
2008 season
Played at Shere Bangla National Stadium, Mirpur (neutral venue), on 14 June 2008 - day/night (50-over match)
Result Pakistan won by 25 runs


Once again we put up a fine performance through out the league stages, mmmm cannot be termed as league stages as there were not much matches, between finals and the league stages.
But how often do we see our team scrambling towards finals and losing it in the boundary as if it is an unknown territory. I am sure this might be the feeling of folks who have viciously started
watching cricket due to the heroics of Sachin Ramesh Tendulkar where team revolved around him and fell like a house on fire around him.

But atleast that sort of one sidedness i.e. towards Sachin (not Towards opponents) prevail. Fine for the fact that every one started contributing . I strongly feel that the team effort in Defeat is still better than the one man's show in victory. Some of my friend's won't agree that Defeat is better than victory. Yes of course. But looking at the Team effort it has to come over the matches rather than the one man show is always the Show stopper. If he fails then it becomes the crunch game at that point itself.

So i'm strongly still in favour of cricket in my country with the mightiest self belief i have ever had for the team. Yes the team india is playing as team india now. Probably this might be the real dawn for the era of Indian cricket domination in the field.

Even after all these things and talks i have started watching cricket only because of Sachin and i', watching it only because of him. A true architect of cricket in which once said to be prevailed gentlemannes (My Discovery - Don't Grab a Dictionary) still prevails in Sachin....

Hats off to Sachin for which he has taken our cricket to the next level.
P.S - "Doctors beware of your jobs, Sachin in the field leads to one billion healthy Smiles:-)"
- MJV

Friday, June 13, 2008

Me, Myself and the thinking Brain

I always love to express myself amidst others thinking that's the way to capture people's imagination.
I spend every single penny to be happy to the core thinking that's the way to live as if there's no tomorrow.
I spread my wings of imagination to explore the world thinking that's the way to purify youself
in draining world.
I jump in joy when i play cricket thinking that's the way to bring the child in you alive after all you cannot be an adult without being childish at times.
I punch hands in air when i solve my official issues with ease thinking that's the way to react when tough gets going and threatens to win dubious race in which you are the other racer.
I sob when i come through the difficult part of my life thinking that's the way to vent out
frustrations as i already mentioned myself as an expressive human.
Now the difficult part of my thinking brain takes lime light and asks me "You very expressive, joyous, imaginative, innovative "YOU" why do you think twice to act for sponsoring a child, who also has all the right to express your kind of behaviour".
My thinking brain works overtime these days thinking to alter my altar.
- MJV

Wednesday, June 11, 2008

Three cheers for Indian triumph in Aussie den
To go ahead with the way Indians have played, yes we get the feeling that Indians are out there to match word with word also matching performance to performance starting from ball to ball and eye blink to eye blink.
We can see a transformation in this Indian team from rejecting the seniors and captain taking on the gamble with his youngsters. It seems to have well paid off. This was the same case in 2000 when dada too had started a new era in Indian cricket which we should not forget. When thinking about this team i have finally found a difference. There when dada started experimenting with some of the youngsters they let it slip by not fulfilling the faith of their captain.
But here like an age old fairy tale whom ever Dhoni asked to perform they have turned gold and performed like there is no other day to perform. That is the nice attitude to be spread among the team. The key to the success of modern day cricket is to adapt the conditions pretty quickly.
That has been the watch word which was instilled by Anil kumble, the man who took the mantle to the highest summit in the test series. That was well fought and this ODI series was truly a reflection of the hunger of new found indian team.
Let’s not jump the spots and get into the discussion of whether this is the team for WC-2011 instead we take the steps gradually and hope we revive ourselves for the newly attained throne amidst of the reviving controversies.
- MJV

Drink, Drank, Drunk

I’ve got this energizing passion for drinking. More than that it is to spend time with friends in a lively way. I’m not insisting on the fact that this is the lovely way to spend time with friends. Whatever i’ve mentioned here is purely my opinion.
When going gets tough, tough gets going:-) come out of box to think that i’m still high from my yesterday’s drink. Nothing of that sort. I’ve had friends who were very much feeling offensive when we even take our drinks to their room in search process of a shelter with in the reach. But that always happens. But sooner or later we had not thought of the fact that those friends would come into the same groove of mine or even a notch higher to call them top notch party animals. It all happened in 1 or 2 years after our college days. Yes more than the fact that they started partying, the way they came out with an explanation does leave me in deep abyss of identity crisis:-)
I’ve become vivid watcher of “In high Spirits”, a TV programme which explained about the combination of spirits to keep up your higher spirits nothing but cock tail explanations. What ever you do if it is within your personal space and not interupting others’ personal space everything under your roof is pretty much fine on your part rather my part.
Lot of things come into my mind when i write this piece but still i love not to be Bacchanalian also on the other side not a teetotalar. Love to drink and spend time with my friends with a warning tag on my head hanging bright and a notch higher “Drinking is still injurious to health”.
- MJV