Thursday, August 20, 2009

ஆண்களுக்கான மறுவாழ்வு மையம் - தலைப்பு சரி தான் (எழுத்து பிழை இல்லை!!!)

இதுவரை எவ்வளவோ காலங்களாக பெண்களை அடிமைப்படுத்தி தான் ஆண் சமூகம் தனது ஆதிக்கத்தை காண்பித்து வந்தது. எத்தனையோ கொலைகள் (மனதளவிலும், உயிர் போகும் அளவிலும்) நிகழ்ந்துள்ளன. பொங்கி எழுந்தும் அமைதியாக மறந்தும் பல நிகழ்வுகளை நாம் மறந்து போய் இருக்கிறோம். எத்தனையோ பெண்கள் இப்பொழுதும் அமைதியாக இப்படியான கொடுமையான நிலையில் வாழ்ந்துதான் வருகிறார்கள். 'அடிச்சி ஒதச்சி பொண்ணுங்க கிட்ட வீரத்த காமிக்கிற பொட்ட பசங்களை போட்டு தள்ளனும்' என்ற அளவுக்கு நாம் கோபத்தில் உச்ச நிலைக்கு அனுப்பியுள்ள சம்பவமெல்லாம் நடந்திருக்கின்றது.

அப்போதெல்லாம் ஏன் இப்படி நடக்கிறது, எப்போதுமே இப்படி அடக்கி அடக்கி வெச்சிருக்கோம், ஒரு நாள் எல்லாருமாக மிரள வைக்க போகிறார்கள் என்ற பயமும், ஒரு வித பரிதபாமும் தோன்றியிருக்கிறது. பரிதாபம் என்று சொல்லி பெண்களை மூலைக்கு கொண்டு சென்று முடக்கி வைப்பதல்ல என் எண்ணம். ஆனால் சிறிது நாட்களுக்கு முன், நான் செய்தித்தாளில் படித்த செய்தி கொஞ்சம் நெருடலாகவே இருந்தது. இதெல்லாம் நம் முன்னோர்களால் அவதி பட்ட பெண்கள் ஆண் வர்க்கத்திற்கு கொடுத்த சாபம் இப்பொழுது விஸ்வ ரூபம் எடுத்திருக்கு. இல்லை எப்போதோ எடுத்திருக்கலாம் நமக்கெல்லாம் இப்போதுதான் தெரிய வருகிறதா?

என்ன நடந்திருச்சி இப்படி அடி மேல அடியா பாத்து பாத்து, எழுதறீங்களே அப்படி என்று கேட்கும் கேள்விகளுக்கு பதில் - SIFF ( SAVE INDIA FAMILY FOUNDATION). பெண்களால் ஏதோ ஒரு விதத்தில் துன்புறுத்த பட்டு, சோகத்தில் தத்தளிக்கும் ஆண்களெல்லாம் சேர்ந்து இந்த அமைப்பை துவங்கி உள்ளனர். அவர்களின் கோரிக்கை இரு பாலர்களையும் சமமாக நடத்துங்கள். பெரும்பாலான சமயங்களில் தவறு பெண்கள் தரப்பில் இருந்தாலும் ஆண்களை தண்டிக்கும் ஒரு சமூகத்திலும், அதற்கு உதவியாக இருக்கும் சட்டங்களுக்கு நடுவில் தான் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நன்றாக யோசித்து பார்த்தால் சாலையில் ஒரு பெண் தவறாக குறுக்கில் வந்து விழுந்து இருந்தாலும், ஓட்டியது ஆணாக இருந்தால் பெண்டு கழட்டி விடுவார்கள். இதெல்லாம் நிதர்சனமான உண்மை. இல்லையென்று மறுக்க கூடியவர்கள் கம்மியாக தான் இருப்பார்கள்.

இப்படிப்பட்ட நேரத்தில் பெண்களுக்கு எதிரான இதை விட கொடுமையான விஷயங்கள் வேகமாக நடந்தேறி கொண்டிருக்கின்றன. அலைக்கழிக்கப்பட்டு இருட்டில் தள்ள பட்டு இருந்தவர்கள் இப்போது தங்களுக்கென்று ஒரு குழுமம் அமைத்து இப்போது வெளியில் தலை காட்ட துவங்கி இருக்கிறார்கள். அந்த காலத்தில் கிராமங்களில் சொல்லுவார்கள், அவக வீட்ல "மதுர ஆட்சியாம்" என்று. இதற்கு என்ன பொருள் என்றால், எந்த வீட்டை பற்றி பேசுராங்களோ அவக வீட்ல மனைவியின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என்பது பொருள். அதே போல் சிதம்பர ஆட்சி என்றும் சொல்லுவார்கள். அப்போதும் மதுரை ஆட்சி என்றால் தான் ஒரு குஷியோடு பேசுவார்கள் அதைப் பற்றி.

ஆக எப்பொழுதும் இந்த சமுதாயம் இப்படி நகைச்சுவைக்கு பேசிய விடயங்கள் இன்று உண்மையாக மாறி வருகின்றன. இப்படி ஒரு குழுமம் தொடங்கி ஆண்களை காப்பாற்றுங்கள் என்று கதற துவங்கி உள்ளனர். இதனை ஆராய்ந்து உண்மைகளை இந்த உலகுக்கு எடுத்து சொல்ல வல்ல ஒரு குழுமம் இது.உண்மையாக பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை தட்டி கேட்கும் உலகம், ஆண்களுக்கு நடக்கும் இந்த கொடுமைகளையும் உற்று நோக்க வைக்க தான் இந்த குழுமம் என்று சொல்ல படுகிரது. 'கிளம்பிட்டய்யா கிளம்பிட்டா ' என்று வரும் வடிவேலு அவர்களின் வசனம் போல கிளம்பியிருக்கும் பெண்களுக்கு இது ஒரு சவுக்கடி....

பின் குறிப்பு :இந்த பதிவு பெண்களின் மனதை புண்படுத்த அல்ல. மாறாக பெண்களில் கூட இப்படி கொடுமையாக பெண்கள் உள்ளார்கள் என்று பறைசாற்ற தான்!!!!மேலும் விவரம் அறிய இந்த இணைய தளத்தை சொடுக்கவும்!

http://www.saveindianfamily.org/

- MJV

Tuesday, August 18, 2009

போக்குவரத்தும் காதலியும்

டிராபிக் ஜாம்

நீ பார்க்க மறுத்த என் விழிகளும்,
நான் பார்க்க துடிக்கும் உன் விழிகளும்
நேரெதிரில் சந்திக்கும் போது!

அதிவேக அபராதம்

நூற்றுகணக்கில் மக்கள் இருக்கையில்
உன்னை தேடும் என் பார்வைக்கும் என்னை தேடும்
உன் பார்வைக்கும் விதிக்கப்படும் அபராதம் !

ஒரு வழி பாதை

நீ நடந்த பாதையெங்கும் மலர்கள் ஆக்கிரமித்ததால்
அந்த வழியின் இப்போதைய பெயர்!

ஓட்டுநர் உரிமம்

உன் இதயம் எனும் வண்டி ஓட்ட
உன் விழி அசைவில் 8 போட்டு காட்டாமலே
நான் பெறுவது!

காப்பீடு

உன்னருகில் இருந்து வாழ்க்கை முழுவதும்
உனக்கு இன்ப இன்னல்கள் கொடுக்க, எனக்கு
எடுக்கப்படுவது!

- MJV

Thursday, August 13, 2009

விவசாயியும் நவீன கண்டுப்பிடிப்பும் - நேனோ கணேஷ்!!!!

ஒவ்வொரு முறை விவசாயி மழைக்கு காத்து கிடந்து, பம்பு செட்டில் தண்ணீர் வருகிறதா என்று ஏங்கி, அவன் விவசாயம் செய்து முடித்து அறுவடை செய்வதற்குள் உயிர் போய் உயிர் திரும்பும். சில பேருக்கு உயிரே போய் விடும். உணர்வு பூர்வமாகவோ, அல்லது உடலை விட்டோ.... இப்படி விவசாயியின் வாழ்க்கையில் ஒரு நீங்கா அங்கம் வகிப்பது பம்பு செட். இதற்கு செல்லும் போது எவ்வளவோ சோதனைகளை தாண்டி தான் ஒரு விவசாயி அதை இயக்க செல்ல வேண்டும்.

இப்படி செல்லும் போது, எவ்வளவோ இன்னல்களை அவர்கள் சந்திக்க நேரிடும். அப்படி பட்டதில் சிலவற்றை குறிப்பிட்டு யோசித்ததில் OSSAIN நிறுவனத்தார் கீழ்கண்ட இன்னல்களுக்கு ஆளாவார்கள் என்று கண்டறிந்தனர்:
1. சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பத்தில் விவசாயிகள் நடந்து செல்ல வேண்டும்.
2. மழை சமயத்தில் அந்த இடத்திற்கு சென்றடைய கஷ்டங்கள்.
3. பாம்புகளின் ஆக்ரோஷம்.
4. இரவு நேரங்களில் பாதகமான சூழ்நிலை.
5. திருட்டு பயம்.

கிராமிய பாசன திட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட பம்புகள் எல்லாம் ஒரு கிலோமீட்டர் தொலைவிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவு வரை இருக்கும் என்பதை மனதில் கொண்டு இவர்களின் வாழ்வு சுலபமாகும் வகையில் OSSAIN நிறுவனத்தினர் ஒரு கருவியயை கண்டு பிடித்து அதற்கு விவசாய பம்பு செட்டுக்கான தொலை நோக்கு கருவி (Remote Control for Agriculture Pumpsets) என்று பெயரிட்டனர்.

ஒரு நோக்கியா அலைபேசி, ஒரு நேனோ கணேஷ் இணக்கி இருக்கும். இவை இரண்டும் மின்சார பம்பு துவங்கியில் இணைக்கப்படும். விவசாயி எந்த இடத்தில வேண்டுமானாலும் இருந்து இந்த அலைபேசியை அழைத்து (ஒரு குறிப்பிட்ட இலக்கம் கொடுக்கப்படும்) அதை வைத்து கொண்டு பம்பை இயக்கலாம். ஒரு குறிப்பிட்ட ஒலி குறியீடை கொண்டு, பம்பு இயங்குகிறதா இல்லையா என்றும், அந்த இடத்தில மின்சாரம் உள்ளதா என்றும் கண்டறிய முடியும்.

அந்த பம்பை திருட முயற்சி நடந்தால் கூட அலைபேசிக்கு. விழிப்பாக இருக்க தகவல் அனுப்பப்படும். இது இப்போதைக்கு ஒரு சில மாதிரியுருக்களில் மட்டுமே உள்ளது. இன்றைய நவீன உலகத்தில் விவசாயிக்கு நன்மை பயக்கும் விதத்தில் இருக்கும் இந்த கருவியை கண்டுபிடத்தமைக்கு நன்றிகள் பல.

இதை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று நினைப்பவர்களுக்கோ, இதை இவர்களுக்கு பரிந்துரை செய்யலாம் என்று நினைபவர்களுக்கோ, மேலும் தெரிந்து கொள்ள இந்த முகவரியை சொடுக்கவும். http://www.nanoganesh.com/

- MJV

Tuesday, August 11, 2009

WADA விற்கு வடை கொடுத்த இந்திய கிரிக்கெட் வாரியம்!

அந்த காலத்தில் காக்காவிடம் வடை பிடுங்கி தின்ற நரி கதை கேள்வி படாத மக்களே இல்லை.... ஆனால் இப்போது நவீன காலத்தில் அது ஊசி போன வடை என்று, ஒரு வாரியத்துக்கு இன்னொரு வாரியம் கொடுத்த கதையை பார்ப்போம்.... இது உங்களுக்கெல்லாம் தெரிந்த உண்மை சம்பவமும்தான்......


WADA - World Anti Doping Agency:
1998 ஆம் ஆண்டு உலக மிதி வண்டி போட்டிகள் ஏற்படுத்திய பெரும் அதிர்ச்சியினால் உலக ஒலிம்பிக்ஸ் கழகம், ஒரு மாநாட்டை கூட்டியது.... இந்த மாநாட்டில் செயல் திறன் ஊக்கிகள் பயன்பாட்டை தடுக்க முயற்சிகளின் எடுக்க பட்டன.... அதன் விளைவாக லுசன்னே என்ற இடத்தில் 1999 ஆம் வருடம் பிப்ருரி மாதம் 2 முதல் 4 ஆம் தேதி வரை நடந்த கூட்டத்தில் விளையாட்டுக்கான செயல் ஊக்கிகள் தீர்மானம் வெளியிட பட்டது..... இந்த தீர்மானத்தின் மூலம் ஒரு சுதந்திரமான அகில உலக செயல் திறன் ஊக்கிகளுக்கு எதிரான குழுமம் ஒன்று தொடங்கப்பட்டு, சிட்னியில் நடந்த 27 ஆவது ஒலிம்பிக்ஸ் விளையாட்டுக்களில் அனைத்து விளையாட்டு வீரர்களும் கண்காணிக்க பட்டனர்....
அதன் பிறகு லுசன்னே தீர்மானம் சொன்ன விதி முறைகளை கொண்டு WADA 1999 ஆம் வருடம் நவம்பர் மாதம் 10 ஆம் நாள் துவங்கப்பட்டது..... அன்றிலிருந்து இன்று வரை செயல்திறன் ஊக்கிகள் பயன்படுத்தும் விளையாட்டு வீரர்களை எல்லாம் கண்டு பிடித்து தக்க சன்மானங்கள்:-) வழங்கி வருகிறது!உலகத்தில் இருக்கின்ற அனைத்து விளையாட்டையும் மக்களிடத்தில் கொண்டு செல்வது ஊடகம் என்றால், அதையே நம்பிக்கையுடன் மக்கள் பார்க்க செய்ய தூண்டுகோலாக இருப்பது இந்த WADA. உலகத்தில் உள்ள அனைத்து விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் அனைவரையும் இந்த WADA கைக்குள் வைத்திருக்கிறது..... காரணம் இவர்கள் நடத்தும் பரிசோதனைகளில் தெரிந்து விடும் யார் யார் செயல்திறன் ஊக்கிகளை தெரிந்தோ தெரியாமலோ பயன்படுத்தி இந்த என்று.... இதன் மூலம் பல வருடங்களோ இல்லை ஆயுள் முழுவதுமோ, அவர்கள் விளையாட்டிலிருந்து நீக்க படலாம்.


உதாரணம் கிரிக்கெட்டில் முஹம்மத் ஆஸிப் மற்றும் சுழற்பந்து சூறாவளி வார்னே ஆகியோர் ஒரு வருடம் ஆட்டத்தில் இருந்து தடை செய்யப்பட்டனர்! இதெல்லாம் நமக்கு தெரிந்த விஷயங்களே:-)

இந்த குழுமத்தின் விதிமுறைகளை உலகத்தில் உள்ள 571 விளையாட்டு ஸ்தாபனங்களும் மற்றும் 191 நாடுகளும் மற்றும் UNESCO போன்ற பல நிறுவங்களும் ஒத்து கொண்டுள்ளன..... ஆனால் WADA தன்னை ஒரு விளையாட்டு ஸ்தாபனம் போடா என்று சொல்லும் என்று எதிர்பார்த்திருக்கது..... அதை செய்தது நம் இந்திய கிரிக்கெட் வாரியம். இங்கே சிக்கலான பிரச்சனை என்னவென்றால் WADA விதிமுறைகள் அனைத்தையும் இந்திய கிரிக்கெட் வாரியம் ஒப்புக்கொண்டுவிட்டது.

உலக டென்னிஸ் வீரர்களான நடால் மற்றும் செரினா வில்லியம்ஸ் பாதித்த ஒரு விதிமுறைதான் நமது கிரிக்கெட் வீரர்களையும் ஒரு நிமிடம் யோசிக்க வைத்தது. வந்தது வினை இந்த இடத்தில் தான்.

அந்த சர்ச்சைக்குரிய விதிமுறை:
" விளையாடாத போதும் வீரர்கள் செயல் திறன் ஊக்கிகள் பயன்படுத்தி உள்ளார்கள் என்ற சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் . அப்போதும் விளையாட்டு வீரர்கள் எங்கே உள்ளார்கள் என்பது WADA விற்கு தெரிய வேண்டும் என்பதுதான்"

இதனை தொடர்ந்து பல நட்சத்திர ஆட்டக்காரர்கள் இதனை எதிர்த்து கருத்து தெரிவிக்க ஆரம்பித்தார்கள்... இது தங்களுடைய அந்தரங்க வாழ்கையை பாதிக்கும் என்றும், பல வீரர்களுக்கு Z Grade பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதால் அத்தகைய விஷயங்களை பகிர்ந்து கொள்ள தயங்கினர்.... இதை பற்றி முதலில் கண்டு கொள்ளாமல் இருந்த இந்திய கிரிக்கெட் வாரியம், கடைசியில் வெகுண்டெழுந்து இதை நாங்களும் ஒத்து கொள்கிறோம் என்று உலக கிரிக்கெட் வாரியத்திற்கு செய்தி அனுப்பி விட்டது... இதில் இன்னொரு வேடிக்கை எப்போதும் பிளவு பட்டு நிற்கும் உலக கிரிக்கெட் வாரிய உறுப்பினர்கள் (கிரிக்கெட் விளையாடும் பிற நாடுகள்) இந்த விஷயத்தில் ஒத்து கொண்டு விட்டன... இல்லையென்றால் வாக்களிப்பு நடத்தி வழக்கம் போல் இந்திய இதிலும் வெற்றி பெற்றிருக்கும்.... அது நடக்காமல் போனது யாரை நொந்து கொள்வது என்று தெரியாமல் இந்திய கிரிக்கெட் வாரியம் இப்பொழுது WADA விதிமுறைகளில் இருந்து இதை எடுக்க வேண்டும் என்றே வலியுறுத்தி வருகிறது.

இது கண்டு இந்தியாவில் கிரிக்கெட் அல்லாத (திகைப்பான விஷயம்!) பிற ளையாட்டு துறையினர் பொறுமை இழந்து விட்டனர். கிரிக்கெட் வீரர்கள் என்ன வானத்தில் இருந்து வந்தவர்களா என்று பல கருத்துகள். கில்லி படம் பார்த்து உறங்கிய இந்திய ஹாக்கி கழகத்தின் தலைவர் கில் அவர்கள் கூட பொருமி தள்ளி விட்டார்.

என்ன செய்வது என்று தெரியாமல் உலக கிரிக்கெட் வாரியம் விழி பிதுங்கி கொண்டிருக்கிறது. என்ன செய்யலாம் என்று நாம் என்ன யோசிக்க முடியும்.... உலகத்தில் கிரிக்கெட் அதிகம் பார்க்கும் நாடு, உலகத்தில் கிரிக்கெட் விளையாடல் அதிக வருமானம் பெரும் வாரியம், கிரிக்கெட் வீரர்கள் கடவுளாய் வணங்கப்படும் நாடு, இப்படி எல்லாம் இருக்கும் போது எதைதான் வீரர்கள் யோசிக்க வேண்டும்... நடக்கட்டும் நடக்கட்டும், இதையெல்லாம் யாராலும் சொல்லி புரிய வைக்க இயலாது....

- MJV

Friday, August 7, 2009

வீழும் சுதந்திரம்....

சுதந்திர தினம் தினமும் கிடைத்தால் இருபது விழுக்காடு
பசி போகுமோ என்ற ஏக்க கண்களில் வீழும் சுதந்திரம்,

அம்மாவின் ஊருக்கு பயணம் செல்ல அனுமதி கிடைக்காமல்
போகுமோ என்ற மனைவியின் ஏக்க கண்ணீரில் வீழும் சுதந்திரம்,

மழை வராமல் பண்ணையாரிடம் நிலம் மீட்க படாமல் போகுமோ
என்ற விவசாயியின் மன கலக்கத்தில் வீழும் சுதந்திரம்,

பிள்ளைகள் பார்த்து கொள்ளாமல் முதியோர் இல்லம் போவோமோ
என்ற அந்த பெரியவரின் முள் கிரீடத்தில் வீழும் சுதந்திரம்,

நீதிமன்றங்கள் நீதி தேடினால் நம் வாழ்க்கை தொலைந்து போகுமோ
என்ற அந்த சிதைக்கப்பட்ட சிறுமியின் செருமலில் வீழும் சுதந்திரம்,

தண்ணீருக்கு காத்திருந்து கிடைக்காமல் கண்ணீர் வற்றி போகுமோ
என்ற அந்த பக்கத்து வீட்டு பாட்டியின் பொருமலில் வீழும் சுதந்திரம்,

அந்த நள்ளிரவில் வாழத்தான் வாங்கி கொடுத்தார்கள் சுதந்திரத்தை,
இன்றோ வீழும் மனங்களும் வீழும் சுதந்திரமுமாய் அடுத்த சுதந்திர தினத்தை நோக்கி நாம் வீழ்ந்து கொண்டே......

- MJV

P.S:

மேலே இடம்பெற்றுள்ள கவிதை Youthful vikatan இணைய தளத்தின் சுதந்திர தின சிறப்பு பக்கத்தில் வெளியடப்பட்டுள்ளது. முதல் படைப்பு விகடனில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று.... இதன் மூலம் என்னாலும் எழுத முடியும் என்று ஊக்கம் கொடுத்த என் சகோதரி காயத்ரி அவர்களுக்கும் என்னை மேலும் மேலும் நன்றாக எழுத வைத்த என் மனைவிக்கும், என் பெற்றோருக்கும், என் தங்கை அனுவுக்கும் மேலும் என் அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

http://youthful.vikatan.com/youth/india63/index.asp

http://youthful.vikatan.com/youth/india63/jothivenkatesh15082009.asp

வெத்து பாத்திரங்களும் அட்சய பாத்திரமும்!

உலகம் பிறந்த காலம் முதல் இன்று வரை இனிமேல் இருக்க போகின்ற காலம் வரை எப்பொழுதுமே யாருக்கும் இந்த பழக்கம் மாற வில்லை போலும்!!!!!

எனக்கும் அந்த பழக்கம் மாறவில்லை என்றே எடுத்து கொள்ளலாம்!!! என்ன இது இப்படி சொல்லி, ' போன போகுது ரெண்டு கத்திரிக்காய் சேத்து போடுங்க' என்று காய்கறி காரரிடம் சொல்லுவது போல் இருக்கின்றது.

எதை பற்றி பேசுகிறோம் என்று தெரிந்து கொள்ள மேலும் படியுங்கள்!!! ஒரு குழந்தை பிறக்கின்றது. அதனுடைய வளர்ச்சி.... அப்பா அம்மாவின் மகிழ்ச்சி இப்படி பல விஷயங்கள் ஒரு மனிதனின் வாழ்க்கையில் முடிவு வரை அங்கம் வகிக்கின்றன..... புராதன காலம் தொடங்கி இன்று வரை எப்பொழுதும் கருவில் இருக்கும் குழந்தைக்கு கூர்ந்து கேட்கும் திறன் இருப்பதை அறிகின்றோம்....

பக்த பிரகாலாதன் அன்று தன் அம்மாவின் கருவில் வளர்ந்த போதே மகா விஷ்ணுவின் மகிமைகளை அறிந்து தன் அப்பாவை எதிர்த்தான் என்று கேட்டிருக்கிறோம் அது போல ஒரு வேலை பிறவியிலிருந்தே ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கும் பழக்கம் நம் எல்லோருக்கும் இருக்கின்றது என்று நினைத்து கொண்டு இந்த கருத்துக்களை பதிவு செய்கிறேன்....

எப்போதும் ஒரு சின்ன பொருளில் இருந்து ஆரம்பித்து பெரிய அளவில் ஆசைகள் அடங்காமல் போய் கொண்டிருப்பதுதான் மனித சமுதாயத்தின் வளர்ச்சியா????
சிறு குழந்தைக்கு பொம்மை மீது ஆசை வளர்ந்து வரும் பொழுது ஒரு எழுதுகோலின் மீது ஆசை.... சிறிது காலம் சென்ற பின்னர் அந்த ஆசை மாறும், ஆசைகள் தானே மனிதனின் மாறாத ஒரு குணம்..... இப்படி ஆசைகள் பெருக பெருக நாமெல்லாம் வெத்து பாத்திரங்களை போய் கொண்டிருப்பது நமக்கே தெரியாமல் நடந்து கொண்டிருக்கும் ஒரு வளர் சிதை மாற்றம்.....

இப்படியெல்லாம் தோன்றினாலும், இதோ இந்த பதிவை பதிவு செய்யும் போது கூட புதிதாக வந்திருக்கும் நான்கு சக்கர வாகனம் பற்றி யோசித்து கொண்டுதான் எழுதி வரிகளை முடித்து கொண்டிருக்கிறேன்..... ஆசை இருக்கும் பட்சத்தில் நாமெல்லாம் எப்போதுமே வெத்து பாத்திரமாய் தான் இருக்கின்றோமோ என்ற எண்ணம் தோன்றி மங்கலாய் என் மனதில் வெளிச்சம் போடுகிறது......

ஆனால் அட்சய பாத்திரமாய் இருக்க என்ன செய்ய போகிறோம்... அல்லது தெரியாமல் மறைந்து இருக்கும் அட்சய பாத்திரமாய் இருப்பதை காட்டிலும் இப்படி இருப்பது மேலோ என்றும் இந்த குரங்கு மனது பாடு படுத்துகிறது.....

என்ன ஆசைகள் இருந்தாலும் அந்த பாத்திரங்கள் பத்திர படுத்த படுமேயானால் அது வெத்து பாத்திரமோ அட்சய பாத்திரமோ பரவாயில்லை.... வெத்து பாத்திரம் என்றால் நிரப்பி கொள்வோம், அட்சய பாத்திரம் என்றால் எடுத்து கொள்வோம்..... அளவான ஆசை என்றுமே இருக்கும் போது ' அனைத்துக்கும் ஆசை படு' என்று தையிரியமாக சொல்லலாம் என்று நினைக்கிறேன்!!!!