Tuesday, August 11, 2009

WADA விற்கு வடை கொடுத்த இந்திய கிரிக்கெட் வாரியம்!

அந்த காலத்தில் காக்காவிடம் வடை பிடுங்கி தின்ற நரி கதை கேள்வி படாத மக்களே இல்லை.... ஆனால் இப்போது நவீன காலத்தில் அது ஊசி போன வடை என்று, ஒரு வாரியத்துக்கு இன்னொரு வாரியம் கொடுத்த கதையை பார்ப்போம்.... இது உங்களுக்கெல்லாம் தெரிந்த உண்மை சம்பவமும்தான்......


WADA - World Anti Doping Agency:
1998 ஆம் ஆண்டு உலக மிதி வண்டி போட்டிகள் ஏற்படுத்திய பெரும் அதிர்ச்சியினால் உலக ஒலிம்பிக்ஸ் கழகம், ஒரு மாநாட்டை கூட்டியது.... இந்த மாநாட்டில் செயல் திறன் ஊக்கிகள் பயன்பாட்டை தடுக்க முயற்சிகளின் எடுக்க பட்டன.... அதன் விளைவாக லுசன்னே என்ற இடத்தில் 1999 ஆம் வருடம் பிப்ருரி மாதம் 2 முதல் 4 ஆம் தேதி வரை நடந்த கூட்டத்தில் விளையாட்டுக்கான செயல் ஊக்கிகள் தீர்மானம் வெளியிட பட்டது..... இந்த தீர்மானத்தின் மூலம் ஒரு சுதந்திரமான அகில உலக செயல் திறன் ஊக்கிகளுக்கு எதிரான குழுமம் ஒன்று தொடங்கப்பட்டு, சிட்னியில் நடந்த 27 ஆவது ஒலிம்பிக்ஸ் விளையாட்டுக்களில் அனைத்து விளையாட்டு வீரர்களும் கண்காணிக்க பட்டனர்....
அதன் பிறகு லுசன்னே தீர்மானம் சொன்ன விதி முறைகளை கொண்டு WADA 1999 ஆம் வருடம் நவம்பர் மாதம் 10 ஆம் நாள் துவங்கப்பட்டது..... அன்றிலிருந்து இன்று வரை செயல்திறன் ஊக்கிகள் பயன்படுத்தும் விளையாட்டு வீரர்களை எல்லாம் கண்டு பிடித்து தக்க சன்மானங்கள்:-) வழங்கி வருகிறது!உலகத்தில் இருக்கின்ற அனைத்து விளையாட்டையும் மக்களிடத்தில் கொண்டு செல்வது ஊடகம் என்றால், அதையே நம்பிக்கையுடன் மக்கள் பார்க்க செய்ய தூண்டுகோலாக இருப்பது இந்த WADA. உலகத்தில் உள்ள அனைத்து விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் அனைவரையும் இந்த WADA கைக்குள் வைத்திருக்கிறது..... காரணம் இவர்கள் நடத்தும் பரிசோதனைகளில் தெரிந்து விடும் யார் யார் செயல்திறன் ஊக்கிகளை தெரிந்தோ தெரியாமலோ பயன்படுத்தி இந்த என்று.... இதன் மூலம் பல வருடங்களோ இல்லை ஆயுள் முழுவதுமோ, அவர்கள் விளையாட்டிலிருந்து நீக்க படலாம்.


உதாரணம் கிரிக்கெட்டில் முஹம்மத் ஆஸிப் மற்றும் சுழற்பந்து சூறாவளி வார்னே ஆகியோர் ஒரு வருடம் ஆட்டத்தில் இருந்து தடை செய்யப்பட்டனர்! இதெல்லாம் நமக்கு தெரிந்த விஷயங்களே:-)

இந்த குழுமத்தின் விதிமுறைகளை உலகத்தில் உள்ள 571 விளையாட்டு ஸ்தாபனங்களும் மற்றும் 191 நாடுகளும் மற்றும் UNESCO போன்ற பல நிறுவங்களும் ஒத்து கொண்டுள்ளன..... ஆனால் WADA தன்னை ஒரு விளையாட்டு ஸ்தாபனம் போடா என்று சொல்லும் என்று எதிர்பார்த்திருக்கது..... அதை செய்தது நம் இந்திய கிரிக்கெட் வாரியம். இங்கே சிக்கலான பிரச்சனை என்னவென்றால் WADA விதிமுறைகள் அனைத்தையும் இந்திய கிரிக்கெட் வாரியம் ஒப்புக்கொண்டுவிட்டது.

உலக டென்னிஸ் வீரர்களான நடால் மற்றும் செரினா வில்லியம்ஸ் பாதித்த ஒரு விதிமுறைதான் நமது கிரிக்கெட் வீரர்களையும் ஒரு நிமிடம் யோசிக்க வைத்தது. வந்தது வினை இந்த இடத்தில் தான்.

அந்த சர்ச்சைக்குரிய விதிமுறை:
" விளையாடாத போதும் வீரர்கள் செயல் திறன் ஊக்கிகள் பயன்படுத்தி உள்ளார்கள் என்ற சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் . அப்போதும் விளையாட்டு வீரர்கள் எங்கே உள்ளார்கள் என்பது WADA விற்கு தெரிய வேண்டும் என்பதுதான்"

இதனை தொடர்ந்து பல நட்சத்திர ஆட்டக்காரர்கள் இதனை எதிர்த்து கருத்து தெரிவிக்க ஆரம்பித்தார்கள்... இது தங்களுடைய அந்தரங்க வாழ்கையை பாதிக்கும் என்றும், பல வீரர்களுக்கு Z Grade பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதால் அத்தகைய விஷயங்களை பகிர்ந்து கொள்ள தயங்கினர்.... இதை பற்றி முதலில் கண்டு கொள்ளாமல் இருந்த இந்திய கிரிக்கெட் வாரியம், கடைசியில் வெகுண்டெழுந்து இதை நாங்களும் ஒத்து கொள்கிறோம் என்று உலக கிரிக்கெட் வாரியத்திற்கு செய்தி அனுப்பி விட்டது... இதில் இன்னொரு வேடிக்கை எப்போதும் பிளவு பட்டு நிற்கும் உலக கிரிக்கெட் வாரிய உறுப்பினர்கள் (கிரிக்கெட் விளையாடும் பிற நாடுகள்) இந்த விஷயத்தில் ஒத்து கொண்டு விட்டன... இல்லையென்றால் வாக்களிப்பு நடத்தி வழக்கம் போல் இந்திய இதிலும் வெற்றி பெற்றிருக்கும்.... அது நடக்காமல் போனது யாரை நொந்து கொள்வது என்று தெரியாமல் இந்திய கிரிக்கெட் வாரியம் இப்பொழுது WADA விதிமுறைகளில் இருந்து இதை எடுக்க வேண்டும் என்றே வலியுறுத்தி வருகிறது.

இது கண்டு இந்தியாவில் கிரிக்கெட் அல்லாத (திகைப்பான விஷயம்!) பிற ளையாட்டு துறையினர் பொறுமை இழந்து விட்டனர். கிரிக்கெட் வீரர்கள் என்ன வானத்தில் இருந்து வந்தவர்களா என்று பல கருத்துகள். கில்லி படம் பார்த்து உறங்கிய இந்திய ஹாக்கி கழகத்தின் தலைவர் கில் அவர்கள் கூட பொருமி தள்ளி விட்டார்.

என்ன செய்வது என்று தெரியாமல் உலக கிரிக்கெட் வாரியம் விழி பிதுங்கி கொண்டிருக்கிறது. என்ன செய்யலாம் என்று நாம் என்ன யோசிக்க முடியும்.... உலகத்தில் கிரிக்கெட் அதிகம் பார்க்கும் நாடு, உலகத்தில் கிரிக்கெட் விளையாடல் அதிக வருமானம் பெரும் வாரியம், கிரிக்கெட் வீரர்கள் கடவுளாய் வணங்கப்படும் நாடு, இப்படி எல்லாம் இருக்கும் போது எதைதான் வீரர்கள் யோசிக்க வேண்டும்... நடக்கட்டும் நடக்கட்டும், இதையெல்லாம் யாராலும் சொல்லி புரிய வைக்க இயலாது....

- MJV

No comments: