சன்னலோரமாய்!!!
உன் சன்னலோர தரிசனம் நித்தம்
வேண்டும் என்றாலும்,
பொறாமை பிடித்தவர்கள்
உன்னை பார்த்து
அடுத்த முறை
சந்திராயனை
சன்னல் கம்பிக்கு பின் செலுத்தி விட்டால்?
வீடு
பல வருடங்கள் வாழ்ந்த வீட்டை
இடித்த போது, விழுந்து சிதறிய செங்கல்லில்
விழாமல் இருந்த அவனும் அவனது
உறவுகளும் சேர்ந்தே சிதறி போயின...
ஆடை
இலையில் துவங்கி இலையை விட
சிறிதாய் சுருங்கிப் போன
நாகரிக சின்னம்!
ஒரு வழி பாதை
நீ நடந்த பாதையெங்கும்
மலர்கள் ஆக்கிரமித்ததால்
அந்த வழியின் இப்போதைய பெயர்!
- காவிரிக்கரையோன் MJV
P.S:
மேலே இடம்பெற்றுள்ள கவிதை யூத்ஃபுல் விகடன் இணைய தளத்தின் முகப்பு பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. அதை காண கீழ்கண்ட இணைய தள முகவரியை சொடுக்கவும்.
http://youthful.vikatan.com
http://youthful.vikatan.com/youth/Nyouth/kavirikaraiyon30102009.asp
4 comments:
//வீடு
பல வருடங்கள் வாழ்ந்த வீட்டை
இடித்த போது, விழுந்து சிதறிய செங்கல்லில்
விழாமல் இருந்த அவனும் அவனது
உறவுகளும் சேர்ந்தே சிதறி போயின...//
உணர்வுபூர்வமான வரிகள்.........
@ஊடகன் - நன்றி.... வருகைக்கும் ரசித்ததற்கும்.....
மனத்தை இழுத்தணைத்துக் கட்டிக் கொள்ளும்
கவிதை வரிகள் 'சூப்பர்'
@ ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி - வருகைக்கும் பின்னூடத்திற்கும் நன்றி நண்பரே....
Post a Comment