Saturday, November 7, 2009

குறுங்கவிதைகள்...

காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு....
அக்கா கொஞ்சம் மாவு கொடுங்க,
ஏம்மா இன்னிக்கி ரசம் வெச்சா கொடு
அக்கா வீட்ல செஞ்சேன் எடுத்துக்கோங்க
யெம்மா இன்னிக்கி வீட்ல சாமி கும்பிட்டோம்,

பாத்திரங்கள் வழி பயணப்பட்ட அன்பு,
வீட்டுக்குள் வராமலே கேட்ட குரல்கள்,
கொல்லைபுற மதில் சுவர் வழியே
வீட்டுக்குள் எப்போதும் வாழ்ந்தவர்கள்,
இப்போது கான்கிரீட் காடுகளில் காணாமல் போனவர்கள்.....


வெறுமை
வண்ணத்துபூச்சியின் சிறகதிர்வு காணாமல்

போனதில் கலங்கிப்போன தோட்டம்,
மழையின் ஆட்டம் நின்ற
பின் சகாரவாகிப் போன சாலை,
அகண்ட நீள் பிரம்மாண்டத்தில் புள்ளியைவிட
சிறியதாய் போன பூமி,
அம்மாவாசை இரவினில் நிலவுக் காதலன் மறைந்த
சோகத்தில் கரிந்து போன வானம்,
தோட்டம், சாலை, வானம், பூமி இத்தனை
முரண்பாடுகளுக்கும் இவர்களுக்கும் ஒரே ஒற்றுமை வெறுமை,
இறப்பு அழிக்கும் கண்களைப்
பிறப்புக்கு கொடுத்துதான் பார்ப்போமே,
அவர்களின் வெறுமை போக்கி சாகா வரம் பெறத் தயார் ஆகுவோம்.

முழக்கம்
தேசிய விலங்குகளைப் பாதுகாப்போம்
சரணாலயங்களைப் புதுப்பிபோம்,
முழங்கினார் அரசியல்வாதி.
கழுத்தில் மின்னியது காலையில்
போட்ட புலிப்பல் செயின்...

பூச்சாண்டி
ஒழுங்கா சாப்பிடலைன்னா
பூச்சாண்டிக்கிட்ட சாப்பாட்ட கொடுத்திடுவேன்,
மிரட்டிய அம்மாவைப் பார்த்து சிரித்தபடி
குழந்தை வீட்டினுள்ளே,
கொடுத்தே விடுவார்கள் என்ற
நம்பிக்கையுடன் பூச்சாண்டி வெளியே
கதவோரமாய்...

சோறு
ஒட்டிக் கொண்டிருந்த சோற்றுப்பருக்கைகளை அகற்றிப்
பாத்திரங்களைக் கழுவிக் கொண்டே,
"பையா பக்கத்துல ஏதாவது சாப்பிட வாங்கிட்டு வா",
சொன்னது அன்றைய திருமணத்தில்
வயிறாறசமைத்துக் கொடுத்த
தலைமை சமையல்காரர்...

பேய்
இடுகாட்டின் பக்கமிருந்த சாலையில்
அமர்ந்து, "பேயும் இல்ல பூதமும் இல்லடா "
என்றேன் நண்பனிடம்,
முந்தாநாள் தெருக்கோடி சாமியாரிடம்
எதற்கும் இருக்கட்டுமேயென்று
வாங்கிய தாயத்தை இறுக்கமாய்
பிடித்துக் கொண்டே....

- காவிரிக்கரையோன் MJV

4 comments:

வெண்ணிற இரவுகள்....! said...

பாத்திரங்கள் வழி பயணப்பட்ட அன்பு,
வீட்டுக்குள் வராமலே கேட்ட குரல்கள்,
கொல்லைபுற மதில் சுவர் வழியே
வீட்டுக்குள் எப்போதும் வாழ்ந்தவர்கள்,
இப்போது கான்கிரீட் காடுகளில் காணாமல் போனவர்கள்.....
பாத்திரங்கள் வழி பயணப்பட்ட அன்பு,
வீட்டுக்குள் வராமலே கேட்ட குரல்கள்,
கொல்லைபுற மதில் சுவர் வழியே
வீட்டுக்குள் எப்போதும் வாழ்ந்தவர்கள்,
இப்போது கான்கிரீட் காடுகளில் காணாமல் போனவர்கள்.....

அற்புதம் நண்பா
பேய் கவிதையும் அற்புதம்

காவிரிக்கரையோன் MJV said...

@வெண்ணிற இரவுகள் - வருகைக்கும் பின்னோட்டத்திற்கும் நன்றி நண்பரே.....

ஜெஸ்வந்தி said...

பூச்சாண்டி கவிதை எனக்குப் பிடித்தது. ஒரு வேறுபட்ட கோணம். பூச்சாண்டி இடத்தில் இருந்து யாரும் சிந்தித்திருக்க மாட்டார்கள்.

காவிரிக்கரையோன் MJV said...

@ஜெஸ்வந்தி - வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி...