Saturday, November 21, 2009

இது என்னுடைய அரை சதம்!!!

ஆயிற்று இந்த பதிவை இணையத்தில் ஏற்றும் பொழுது, நான் 50 இடுகைகளை வலைப்பூவில் பதித்திருப்பேன். . என்னடா உன் அலம்பல் தாங்க முடியவில்லை என்று புலம்பும் பதிவர்களே, நண்பர்களே, நான் வலை உலகத்துக்கு வந்தது 2008 ஆம் ஆண்டாக இருந்தாலும், இந்த வருடம் தான் சற்று சுறுசுறுப்புடன் பதிவிட தொடங்கி இருக்கிறேன். இதற்கு காரணம் முழுக்க முழுக்க பதிவுலகம் தான். எத்தனை சிந்தனைகள், எத்தனை வித்தியாசங்கள் என்று எப்படி எப்படியோ மாறுப்பட்டு கிடந்தாலும், இந்த பதிவுலகின் மகத்துவம், அதில் உள்ள பதிவர்களின் எழுத்து நடை என்று பலவற்றையும் ரசிக்க தொடங்கி இருக்கிறேன்.

வந்த புதிதில் இங்கே சண்டை, அங்கே ஒரு வாய்ச் சண்ட, கை கலப்புல முடிந்தது, பார்க்க கூட்டிட்டுப் போய் சந்துல வெச்சி அடிக்கறாய்ங்க என்று பீதியை கிளப்பி கொண்டிருக்க, இதெல்லாம் ஊர்க் குருவி மாதிரியான விடயங்கள், அதெல்லாம் என்ன நினைத்தாலும் மேலே எழும்ப முடியாது என்று உரைக்கும் வண்ணம், கேபிள் சங்கர் என்ற பதிவரின், தந்தை மரணத்தின் போது, பதிவுலக நண்பர்கள் ஒன்று கூடி சத்தம் போடாமல் தங்களால் இயன்றவற்றை செய்து பதிவுலகத்தில், பருந்து பறக்கும் உயரத்திற்கும் மேலே நல் உள்ளம் கொண்டவர்களும் இங்கே தான் இருக்கிறோம் என்று நிரூபித்து விட்டு, பதிவுகள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

500, 1000 என்று பதிவுகளை நெருங்கி கொண்டிருக்கும் பதிவர்கள் அமைதியாய் இருக்க, 50 முடிக்கறதுக்கே, தோரணம் கட்டி பொங்க வைக்கிறது உசிதம் இல்லை என்று எல்லோரும் சொன்னாலும், இந்த பதிவு என்னை போன்று, புதிதாய் எழுதுபவருக்கு ஊக்கம் கொடுக்கும் என்று நினைத்து எழுதுகிறேன். வாங்கப்பா நெறைய எழுதுவோம். ஏதாவது சந்தேகம்னா பதித்து கூட்டி செல்ல நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள் இங்கே!!! சில நண்பர்கள் பொழுதுபோக்கிற்காக எழுதுவாங்க, சில நண்பர்களுக்கு எழுதல்லன்னா தூக்கம் வராதுன்னு நினைக்கிறேன். எப்படியோ எல்லோரும் இப்படி எழுதினார்கள் என்றால், எதை படிக்க, எதை மறக்காமல் படிக்க என்றெல்லாம் குழப்பங்கள் வந்து இந்த வலை உலகத்தை நன்றாய் வாழ வைக்கும்.

நானும் உற்சாகம் மிகுதியில் நாளுக்கு ஒன்று என்ற வீதத்தில் பதிவெழுதும் வித்தைகளை யோசித்து கொண்டுதானிருக்கிறேன். பரிசல்காரன் அவர்களின் ஒரு பதிவைப் பார்த்து ஓ! இப்படிதான் ஒரு நாளுக்கு ஒரு பதிவு போடறாங்களா, இப்போவே கண்ண கட்டுதேனு யோசிச்சிட்டே இருக்கேன். அந்த கால இடைவெளியில் நர்சிம், கார்கி, ஆதிஷா, சென்ஷி, ஜாக்கி சேகர், ஊடகன், இனியவன், தீராத பக்கங்கள், பைத்தியக்காரன், குசும்பன் மற்றும் என்னை கவர்ந்த பல வலைகளையும் சுற்றி வந்துட்டு பாத்தா , வெகு நேரம் கழிந்து போயிருக்கும். அதனால, இப்படி பக்காவாக பதிவு போடும் பல நண்பர்கள் தான் என் பதிவின் எண்ணிக்கையை குறைத்ததில் பெரிய பங்கு வகித்திருக்கிறார்கள் என்று இந்த பதிவிலே தெரிவித்துக் கொள்கிறேன்!!!!!!!!!:-)

இப்படியாக, கொஞ்சம் அதீத வேகத்துடன் (இங்கே வேகம் என்று நான் குறிப்பிட்டு இருப்பது மிதமான வேகம் என்று வைத்து கொள்ளலாம்!!!) பதிவு எழுத ஆரம்பித்த போது சர்வேசன் வலையில் ஒரு சிறுகதைப் போட்டி என்று சொல்லி பல மாதிரி எழுதி கொண்டிருந்த என்னையும் ஒரு சிறுகதை கிறுக்க வைத்தது இந்த வலையுலகம்தான். எவ்வளவோ விடயங்கள் கொட்டி கிடக்கின்றன அதில் புகுந்து தேடினால் கிடைக்காத எழுத்துக்களும் இல்லை, சிந்தனைகளும் இல்லை. பதிவுகளை தான் திருடக்கூடாது. ஆனால் பதிவினால் மாறும் உங்கள் சிந்தனைகளுக்காக யாரும் உங்களுக்கு திருட்டுப்பட்டம் கட்ட மாட்டார்கள்.

இப்பொழுதெல்லாம் என்ன எழுதுவது என்று ரூம் போட்டு யோசிக்க வேண்டாம், நினைத்ததை பார்த்ததை கேட்டதைப் பற்றி எழுதக் கற்று கொடுத்த (சொந்த சிந்தனைனு சொல்ல வரேன்) வலை உலகத்திற்கு என் நன்றி. பின்னூட்டங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். அது ஒரு அருமருந்து. நாகரிகம் பார்த்து, நல்லபடியாய் முரண்பட்டு, பின்னூட்டங்கள் வந்தால் அதை விட ஒரு டானிக் என்னவாக இருக்க முடியும்.

சரி எல்லாருக்கும் ஒரு பெரிய நன்றிப்பா. நிறைவாய், நிறைய எழுத எல்லோருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் வணக்கங்கள்!!!
- காவிரிக்கரையோன் MJV

16 comments:

இராகவன் நைஜிரியா said...

அரை சதத்திற்கு வாழ்த்துகள்.

இராகவன் நைஜிரியா said...

மீ த பர்ஸ்ட்டோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்..

இராகவன் நைஜிரியா said...

ஒரு சிறிய திருத்தம்...

இது உங்களின் பதிவில் ஐம்பதாவது இடுகை..

blog = வலைப்பூ / வலைப்பதிவு / பதிவு

Post = இடுகை..

(நன்றி : பழமை பேசி)

இராகவன் நைஜிரியா said...

// என்னடா உன் அலம்பல் தாங்க முடியவில்லை என்று புலம்பும் //

இந்த அலம்பல் கூட பண்ணவில்லை என்றால் எப்பூடி....?

இராகவன் நைஜிரியா said...

// நான் வலை உலகத்துக்கு வந்தது 2008 ஆம் ஆண்டாக இருந்தாலும், //

நிறுத்தி, நிதானமா முன்னேறுகின்றீர்கள் என நினைக்கின்றேன்.

இராகவன் நைஜிரியா said...

// இதற்கு காரணம் முழுக்க முழுக்க பதிவுலகம் தான். //

அப்படி போடு அருவாள...

காரணம் கண்டுபிடிச்சுட்டீங்க... தமிழ் நாட்டில் அரசியல்வாதி ஆக சகல தகுதியும் வர ஆரம்பிச்சுடுச்சு..

இராகவன் நைஜிரியா said...

// வந்த புதிதில் இங்கே சண்டை, அங்கே ஒரு வாய்ச் சண்ட, கை கலப்புல முடிந்தது, பார்க்க கூட்டிட்டுப் போய் சந்துல வெச்சி அடிக்கறாய்ங்க என்று பீதியை கிளப்பி கொண்டிருக்க, இதெல்லாம் ஊர்க் குருவி மாதிரியான விடயங்கள், அதெல்லாம் என்ன நினைத்தாலும் மேலே எழும்ப முடியாது என்று உரைக்கும் வண்ணம், கேபிள் சங்கர் என்ற பதிவரின், தந்தை மரணத்தின் போது, பதிவுலக நண்பர்கள் ஒன்று கூடி சத்தம் போடாமல் தங்களால் இயன்றவற்றை செய்து பதிவுலகத்தில், பருந்து பறக்கும் உயரத்திற்கும் மேலே நல் உள்ளம் கொண்டவர்களும் இங்கே தான் இருக்கிறோம் என்று நிரூபித்து விட்டு, பதிவுகள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.//

ஒரு குடும்பம் என்று இருந்தால், எல்லாம் இருக்கும்... அது மாதிரித்தான் இதுவும்...

இராகவன் நைஜிரியா said...

// 500, 1000 என்று பதிவுகளை நெருங்கி கொண்டிருக்கும் பதிவர்கள் அமைதியாய் இருக்க, //

அதுக்காக நாம அலம்பல் பண்ணாம இருக்க முடியுமா என்ன?

இராகவன் நைஜிரியா said...

// நானும் உற்சாகம் மிகுதியில் நாளுக்கு ஒன்று என்ற வீதத்தில் பதிவெழுதும் வித்தைகளை யோசித்து கொண்டுதானிருக்கிறேன். //

விரைவில் அது மாதிரி நடக்க வாழ்த்துகள்..

இராகவன் நைஜிரியா said...

// இப்படியாக, கொஞ்சம் அதீத வேகத்துடன் //

அதிக வேகம், அதிக ஆபத்து..

இராகவன் நைஜிரியா said...

// பின்னூட்டங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். //

இஷ்டமில்லை என்றால் யாரும் உங்களை வற்புறுத்த இயலாதுங்க...

உங்க இஷ்டம்.. முடிஞ்சா எப்பவாவது சொல்லுங்க..

இராகவன் நைஜிரியா said...

// சரி எல்லாருக்கும் ஒரு பெரிய நன்றிப்பா. நிறைவாய், நிறைய எழுத எல்லோருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் வணக்கங்கள்!!! //

தங்களின் நன்றிக்கு ஒரு நன்றி..

வாழ்த்துகளுக்கு வாழ்த்துகள்

வணக்கங்களுக்கு வணக்கங்கள்..

என்றென்றும் அன்புடன்

இராகவன், நைஜிரியா..

(கும்மிக்கு மன்னிக்க..)

காவிரிக்கரையோன் MJV said...

சும்மா அதிர அதிர பின்னூட்டங்கள் கொடுத்து இருக்கீங்க! நன்றி இராகவன்.... இடுகை ஆம் அதுதான் சரியான வழக்கம். பதிவு என்பதையும், அதற்கு ஈடாக உபயோக படுத்தி வருகிறோம்..... மாற்றி கொள்கிறேன். அந்த வேக வரிகளுக்கு அடுத்தே, அதை மிதமான வேகமாய் வைத்து கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டு உள்ளேன்!!!

இப்படி ஒரு உற்சாகம் நிறைந்து வழிய பின்னூட்டங்கள் இட்டமைக்கு மீண்டும் ஒரு முறை நன்றி.....

தேவன் மாயம் said...

ஐம்பதுக்கு வாழ்த்துக்கள்!

தேவன் மாயம் said...

இராகவன்சார் அடுச்சுத் தூக்கியிருக்காரே!

காவிரிக்கரையோன் MJV said...

நன்றி தேவன் மாயம் சார். ஆமா இராகவன் இப்போ பின்னி பெடல் எடுக்கிறார். அவரது சமீபத்திய இடுகையை பாருங்கள்!!!!