Tuesday, November 24, 2009

பல்லியின் சத்தம்....

கண்களின் ஊடே அணையின்றி தாண்டிடுமோ கண்ணீர்
என்று விழியின் வாசலை அடைத்து தான் காத்திருந்தேன்
அந்த நாள் கண்டிப்பாக வந்து என்னை சேரும் என்று,

மெல்லிய வண்ணத்துப்பூச்சி வேகமாய் சிறகடித்து
என் பக்கம் கடந்த போதெல்லாம் அதனினும் வேகமாய்
எட்டிப் பார்த்த அந்த கணங்கள் இன்றும் வண்ணத்துப்பூச்சியின்
மேல் மெலிதாய்,எனக்கும் தெரியும் கோபம் உண்டென்று,

பல்லியின் சத்தமெல்லாம் கதவின் ஆயுள் தண்டணை
உடைத்ததென்று அகலமாய் சிரிக்க முடியாமல்
திணறி வந்ததாய் நினைத்து ஆற்றாமை கொண்டதுண்டு,

வண்ணப் பகலுக்கும் வார்த்து வைத்த இரவுக்கும்
முரணான விளக்கங்கள் உண்டென்று உண்மை
கடைசி வரைத் தெரியாக் கூடாதென்ற ஏங்கின மனமுண்டு,

சலசலக்கும் ஆற்று நீருக்கும் சலனமே இல்லாத குளத்து
நீருக்கும் கூட தெரிந்து போன உண்மைகளை அவை
சட்டென்று கரையுடைத்து சொன்னது கூட மறந்ததுண்டு,

தபால்கார அண்ணாச்சியின் வருகை நின்ற பின்னும்
ஒரு கடிதம் வருமென்று ஏங்கி தவித்த காகித காலங்கள்
மீண்டும் வருமென்ற அதீத நம்பிக்கை இருந்ததுண்டு,

கசிந்தோடிய கண்ணீரில் கரைந்த காலங்கள் எங்கள்
மகனை தோள் கொண்டு தூக்கி நிறுத்திய அன்றொரு நாளில்
சட்டென்று வைக்கப் போன குங்குமம் சட்டென்று நிலம் பார்த்தது,

என்ன இது? வினவி எடுக்கும் முன் மகனின் கையில்
காகித தந்தி, புரிந்தது எனக்கு,
ஈன்றெடுத்த அன்னைக்கும், அன்னை பூமிக்குமாய் என்னவர்
இன்று நிஜமாகவே, பூரிப்பும் போர்களமுமாய் நான்....

- காவிரிக்கரையோன் MJV

4 comments:

இராகவன் நைஜிரியா said...

// மெல்லிய வண்ணத்துப்பூச்சி வேகமாய் சிறகடித்து //

யூ மீன் கேயஸ் தியரி...

இராகவன் நைஜிரியா said...

// கண்களின் ஊடே அணையின்றி தாண்டிடுமோ கண்ணீர் //

கர்நாடகாவில் இருந்தா தாண்டாதுங்க...

இராகவன் நைஜிரியா said...

// வினவி எடுக்கும் முன் மகனின் கையில்
காகித தந்தி, புரிந்தது எனக்கு,
ஈன்றெடுத்த அன்னைக்கும், அன்னை பூமிக்குமாய் என்னவர்
இன்று நிஜமாகவே, பூரிப்பும் போர்களமுமாய் நான்....//

ரியலி சூப்பர் அண்ணே...

காவிரிக்கரையோன் MJV said...

வருகைக்கு நன்றி இராகவன். அந்த வண்ணத்துபூச்சி வரிகள், அந்த அம்மாவோட ஒரு விதமான ஏக்கத்துடன் கூடிய எதிர்பார்ப்பை வெளிபடுத்துவதற்கு பயன்படுத்தினேன்.

கயோஸ் தியரி ம்ம்ம்ம் நடத்துங்க இராகவன்!!!

ஆஹா தண்ணீர் பற்றி பேசவே முடியாதுங்கோ!!!!