Tuesday, November 24, 2009

குறுங்கவிதைகள்...

சாமி
சாமிக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்?
காது கிழிய ஒலிபெருக்கியில் எங்கோ ஒரு குரல்,
"சாமி கல்லா உக்காந்திருக்கு,
நாம கல்லா நடமாடறோம்"
சொல்லி சிரித்தால் போன வாரம்
சாதி கலவரத்தில் மகனை பறிகொடுத்த மூதாட்டி....

தன்னம்பிக்கை
நேற்று முன் தினம் மெல்ல
காதலை அவளிடம் சொல்லி,
நேற்று அவளின் பதிலுக்காக காத்திருந்து
வரவில்லை என்றவுடன்,
இன்று எழுதினேன் ஒரு கடிதம் அவளுக்கு,
"அன்புள்ள மனைவிக்கு"!!!

துகிலுரிப்பு
பிஞ்சிகளை சிதைத்தவனுக்கு
இன்று 33 ஆம் முறையாக விசாரணை,
"இந்த வழக்கு அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைக்கப்படுகிறது"
என்றார் நீதிபதி,
"கவலைப்படாதீங்க அடுத்த முறையும் வாய்தா வாங்கிடலாம்"
என்றார் வழக்கறிஞர்,
நீதி தேவதை மற்றுமொரு முறை துகில் உரிக்கப்பட்டாள்...

Mr.X/Mr.Y ஜோக்குகள்... (இவை ஆனந்த விகடனில் வரும் Mr.X/Mr.Y ஜோக்குகளுக்காக எழுதினேன். சரி நம்ம பருப்பு அங்க வேகல உடனே இங்க போட்டிருக்கேன்:-) ஆனந்த விகடன்ல படைப்பு வரணும்னு ஒரு ஆசைதான்!!!! ஓகே ஓகே ஓகே.....)

Mr.X க்கு அரெஸ்ட் வாரண்ட் கொடுத்துட்டாங்கலாமே ஏன் மச்சான்?
அவர் படத்துக்கு போய் நிறைய பேர் தற்கொலை பண்ணிக்கிட்டாங்களாம் அதான்.

Mr.X , நீங்க ஒரு பெரியவராய் நடிக்கறீங்க இந்த படத்தில்.
சார், மேக்கப்புக்கு நிறைய நேரம் பிடிக்குமே?
அதெல்லாம் கவலைப்படாதீங்க Mr.X, உங்களுக்கு மேக்கப்பே தேவைப்படாது!!!

ஏன் இவரு எப்போ பாத்தாலும்,"எல்லாரும் ஒரு நாள் தெருவுக்கு வந்துட்வோம்னு" புலம்பிக்கிட்டே இருக்காரு?
ஓ! அவரா, அவரு தான் இப்போ Mr.Y நடிக்கற படத்தோட ப்ரொடியுசர்!!!

Mr.Y, நீங்க நடிக்க வரலைன்னா என்ன ஆகியிருப்பீங்க?
Mr.Y நீண்ட நேரம் யோசித்து விட்டு, படிச்சி கலெக்டர் ஆகியிருப்பேன்...
இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் பொய்யே பேச மாட்டேன்னு சொன்னீங்க!?!?!

- காவிரிக்கரையோன் MJV

2 comments:

இராகவன் நைஜிரியா said...

குறுங்கவிதைகள் இல்லை...

பெரிய விஷயங்களை சில வரிகளில் சொன்ன பெருங்கவிதை..

சாமி, துகிலுரிப்பு கவிதைகள் ரொம்ப பிடிச்சு இருக்கு..

Mr. X, Mr. y - உண்மையைச் சொல்லட்டுமா... தப்பாக நினைச்சுகாதீங்க, சிரிப்பு என்றால் உடனே வரவேண்டும்.. இதில் இன்னும் கொஞ்சம் தீவிரம் வேண்டும் என்பது என் எண்ணன். (Don't mistake)

காவிரிக்கரையோன் MJV said...

வருகைக்கு நன்றி இராகவன். மொக்கை போடாம ஜோக்குகள் எழுத விழைகிறேன்!