Monday, December 14, 2009

அத்தான்....

விழியோர பார்வைகளும், விரல் போடும்
கோலங்களும் எங்களுக்கு
கிடைக்க வில்லை தான்,


பிறந்த நாள் பரிசுகளும், நித்திரைக்கு
வாழ்த்துக்களும் எங்களுக்கு
வாய்க்க வில்லை தான்,

காத்திருக்க கணங்களோ, பூத்திருந்த
பூக்களோ எங்களுக்கு
வாழ்வில் வரவில்லை தான்,

நீங்கள் தெரு முனை தாண்டும் வரை நானோ,
நான் பேருந்து சன்னலில் மறையும் வரை நீங்களோ
இடம் பெயரா நிமிடங்களில் தத்தளிக்க வில்லை தான்,

இருப்பினும், அந்த முதல் இரவில் 'அத்தான்'
என்ற நீ விக்கி அழைத்ததில் அத்தனை
அந்நியங்களும் அந்நியப்பட்டுதான் போயின...

- காவிரிக்கரையோன் MJV

பி.கு: இந்த கவிதையை
உரையாடல் கவிதை போட்டிக்காக எழுதி அனுப்பியுள்ளேன்!
இந்த இடுகையில் இதற்கான அறிவிப்பும் விதிமுறைகளும் இருக்கின்றன. நீங்களும் கலந்து கொள்ளுங்கள்!!!

13 comments:

கமலேஷ் said...

கவிதை மிகவும் அழகாக இருக்கிறது..
வெற்றிபெற என் வாழ்த்துக்கள்...

காவிரிக்கரையோன் MJV said...

@ கமலேஷ் - வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

கவிதை(கள்) said...

உறவுகள் அந்நியப்படுத்தும் அத்தான் விளிப்பு

அட்டகாசம்

வாழ்த்துக்கள்

விஜய்

அண்ணாதுரை said...

அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்..

Sangkavi said...

அழகாகவும், ஆழமாகவும் இருக்கிறது உங்களது வரிகள்...........

Try To See :
http://sangkavi.blogspot.com/

S.A. நவாஸுதீன் said...

அழகான கவிதைங்க. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

தியாவின் பேனா said...

வெற்றிக்கு வாழ்த்துகள்

thenammailakshmanan said...

//காத்திருக்க கணங்களோ, பூத்திருந்த
பூக்களோ எங்களுக்கு
வாழ்வில் வரவில்லை தான்//

அருமை

நல்லா இருக்கு

வெற்றியடைய வாழ்த்துக்கள்

Ram said...

so sweeeeeeeeeeeeeeeeeeettttttttttttttttttttttt :-)

Vidhoosh said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்

காவிரிக்கரையோன் MJV said...

@ விஜய் - வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி விஜய்
@ அண்ணாதுரை - வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி அண்ணாதுரை
@ sangkavi - வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி sangkavi
@ s.a நவாசுதீன் - வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி s.a நவாசுதீன்
@ தியாவின் பேனா - வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி தியாவின் பேனா
@ thenammailakshmanan - வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி தேனம்மைலக்ஷ்மணன்
@ ram - வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ram
@ vidhoosh - வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி vidhoosh

அவனி அரவிந்தன் said...

அத்தான் என்ற சொல்லுக்கு அத்தனை அழுத்தம் இருக்குது போல. அழகான கவிதை. வெற்றி பெற வாழ்த்துக்கள் !

காவிரிக்கரையோன் MJV said...

@ அவினி அரவிந்தன் - வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி அவினி அரவிந்தன். அந்த வார்த்தைக்கு அத்தனை அழுத்தம் உண்டு தானே நண்பரே!