Friday, December 25, 2009

குறுங்கவிதைகள்!

வீரமும் ஈரமும்
அதிகாலை ஐந்து மணி நிசப்தத்தில் படப்படக்கும்
இதயத்தின் சப்தமும், விழி குத்திட்ட பார்வையும் ,
திக்கென்று இருக்கும் மனதும், எப்போது தொடங்கும்
எப்போது முடியும், என்ற ஆரவாரங்கள்
அனைத்தும் விறைக்க செய்யும் குளிர்ந்த நீரில்
குளிப்பதற்காக மட்டுமே,என்ற போது கொஞ்சம் வீரம்,
கொஞ்சம் ஈரத்தில் காணாமல்தான் போயிருந்தது!!!

ராக்கோழிகள்
அதிகாலை சூரியன் மறைந்து இரவின் நிலவோடு
அன்றாடம் அறிமுகம் பழகுபவர்கள்,
இரவில் வெளிச்சம் தேடித்தேடி நீங்கள் பார்க்கும்
பகலைத் தொலைத்தவர்கள்,
இந்தியாவில் வாழ்ந்தாலும் அந்நிய நேரம்
பழகித் தொலைந்தவர்கள்,
இல்லாத பேய்களையும் உயிருள்ள பேய்களையும்
இருளில் பார்க்கத் திணறியவர்கள்,
நாங்கள் தான் இரவில் பணி புரியும் ராக்கோழிகள்!!!

கோப்பைகள்
மேசை மீதிருந்த இரண்டு கோப்பைகளில்
ஒன்றைக் காணவில்லை,
சில முறை பல பேர் சத்தமாகவும் சில
பேர் மொத்தமாகவும் பேசுகின்றனர்,
சுவர்களும் மேல் கூரையும் ஆட்டம் கண்டு
பூமி அதிர்வா ? என்றும் கேட்க வைக்கின்றது,
உறக்கம் கண்டதும் விழுகிறது மேலே
முகத்திற்கு முன் சுற்றிய மின்விசிறி ,
இவை டாஸ்மார்க்கில் பாஸ்மார்க்
வாங்கி தன் முக்கால்வாசி வாழ்க்கையை
குடிக்கு கொடுத்தவரின் குழப்பங்கள்....

வழி
வழி கொடாமல் சென்ற லாரியை
மடக்கி நடு சாலையில் நின்று
சண்டையிட்டதில் எங்களுக்கு பின்னால்
வந்த யாருக்குமே வழி கிடைக்கவில்லை.


விடுமுறை
இரவில் புலம்பல்கள் அதிகாலை அவசரம்
சீக்கிரம் செல்ல ஆயத்தம் என்று என்றாவது
ஒரு நாள் உச்ச கதியில் இயங்கி கொண்டிருப்பேன்,
மனைவி லேசாய் புன்னகைத்து செல்வாள்,
குளியலறையின் குழாயில் காற்று மட்டுமே வர
சற்று தூரத்தில் சத்தமாய் கேட்கும் அவள் குரல்,
"தண்ணி இன்னிக்கி பத்து மணிக்குதான் வருமாம்",
கைபேசி சகிதமாய் எனக்கு உடம்பு சரியில்லாமல் போகும்
விடுமுறை அன்று!!!


- காவிரிக்கரையோன் MJV

2 comments:

கா.பழனியப்பன் said...

வீரமும் ஈரமும் நல்லா இருந்துச்சு.

kamalesh said...

அதனையும் அழகு வாழ்த்துக்கள்..