Friday, August 7, 2009

வீழும் சுதந்திரம்....

சுதந்திர தினம் தினமும் கிடைத்தால் இருபது விழுக்காடு
பசி போகுமோ என்ற ஏக்க கண்களில் வீழும் சுதந்திரம்,

அம்மாவின் ஊருக்கு பயணம் செல்ல அனுமதி கிடைக்காமல்
போகுமோ என்ற மனைவியின் ஏக்க கண்ணீரில் வீழும் சுதந்திரம்,

மழை வராமல் பண்ணையாரிடம் நிலம் மீட்க படாமல் போகுமோ
என்ற விவசாயியின் மன கலக்கத்தில் வீழும் சுதந்திரம்,

பிள்ளைகள் பார்த்து கொள்ளாமல் முதியோர் இல்லம் போவோமோ
என்ற அந்த பெரியவரின் முள் கிரீடத்தில் வீழும் சுதந்திரம்,

நீதிமன்றங்கள் நீதி தேடினால் நம் வாழ்க்கை தொலைந்து போகுமோ
என்ற அந்த சிதைக்கப்பட்ட சிறுமியின் செருமலில் வீழும் சுதந்திரம்,

தண்ணீருக்கு காத்திருந்து கிடைக்காமல் கண்ணீர் வற்றி போகுமோ
என்ற அந்த பக்கத்து வீட்டு பாட்டியின் பொருமலில் வீழும் சுதந்திரம்,

அந்த நள்ளிரவில் வாழத்தான் வாங்கி கொடுத்தார்கள் சுதந்திரத்தை,
இன்றோ வீழும் மனங்களும் வீழும் சுதந்திரமுமாய் அடுத்த சுதந்திர தினத்தை நோக்கி நாம் வீழ்ந்து கொண்டே......

- MJV

P.S:

மேலே இடம்பெற்றுள்ள கவிதை Youthful vikatan இணைய தளத்தின் சுதந்திர தின சிறப்பு பக்கத்தில் வெளியடப்பட்டுள்ளது. முதல் படைப்பு விகடனில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று.... இதன் மூலம் என்னாலும் எழுத முடியும் என்று ஊக்கம் கொடுத்த என் சகோதரி காயத்ரி அவர்களுக்கும் என்னை மேலும் மேலும் நன்றாக எழுத வைத்த என் மனைவிக்கும், என் பெற்றோருக்கும், என் தங்கை அனுவுக்கும் மேலும் என் அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

http://youthful.vikatan.com/youth/india63/index.asp

http://youthful.vikatan.com/youth/india63/jothivenkatesh15082009.asp

வெத்து பாத்திரங்களும் அட்சய பாத்திரமும்!

உலகம் பிறந்த காலம் முதல் இன்று வரை இனிமேல் இருக்க போகின்ற காலம் வரை எப்பொழுதுமே யாருக்கும் இந்த பழக்கம் மாற வில்லை போலும்!!!!!

எனக்கும் அந்த பழக்கம் மாறவில்லை என்றே எடுத்து கொள்ளலாம்!!! என்ன இது இப்படி சொல்லி, ' போன போகுது ரெண்டு கத்திரிக்காய் சேத்து போடுங்க' என்று காய்கறி காரரிடம் சொல்லுவது போல் இருக்கின்றது.

எதை பற்றி பேசுகிறோம் என்று தெரிந்து கொள்ள மேலும் படியுங்கள்!!! ஒரு குழந்தை பிறக்கின்றது. அதனுடைய வளர்ச்சி.... அப்பா அம்மாவின் மகிழ்ச்சி இப்படி பல விஷயங்கள் ஒரு மனிதனின் வாழ்க்கையில் முடிவு வரை அங்கம் வகிக்கின்றன..... புராதன காலம் தொடங்கி இன்று வரை எப்பொழுதும் கருவில் இருக்கும் குழந்தைக்கு கூர்ந்து கேட்கும் திறன் இருப்பதை அறிகின்றோம்....

பக்த பிரகாலாதன் அன்று தன் அம்மாவின் கருவில் வளர்ந்த போதே மகா விஷ்ணுவின் மகிமைகளை அறிந்து தன் அப்பாவை எதிர்த்தான் என்று கேட்டிருக்கிறோம் அது போல ஒரு வேலை பிறவியிலிருந்தே ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கும் பழக்கம் நம் எல்லோருக்கும் இருக்கின்றது என்று நினைத்து கொண்டு இந்த கருத்துக்களை பதிவு செய்கிறேன்....

எப்போதும் ஒரு சின்ன பொருளில் இருந்து ஆரம்பித்து பெரிய அளவில் ஆசைகள் அடங்காமல் போய் கொண்டிருப்பதுதான் மனித சமுதாயத்தின் வளர்ச்சியா????
சிறு குழந்தைக்கு பொம்மை மீது ஆசை வளர்ந்து வரும் பொழுது ஒரு எழுதுகோலின் மீது ஆசை.... சிறிது காலம் சென்ற பின்னர் அந்த ஆசை மாறும், ஆசைகள் தானே மனிதனின் மாறாத ஒரு குணம்..... இப்படி ஆசைகள் பெருக பெருக நாமெல்லாம் வெத்து பாத்திரங்களை போய் கொண்டிருப்பது நமக்கே தெரியாமல் நடந்து கொண்டிருக்கும் ஒரு வளர் சிதை மாற்றம்.....

இப்படியெல்லாம் தோன்றினாலும், இதோ இந்த பதிவை பதிவு செய்யும் போது கூட புதிதாக வந்திருக்கும் நான்கு சக்கர வாகனம் பற்றி யோசித்து கொண்டுதான் எழுதி வரிகளை முடித்து கொண்டிருக்கிறேன்..... ஆசை இருக்கும் பட்சத்தில் நாமெல்லாம் எப்போதுமே வெத்து பாத்திரமாய் தான் இருக்கின்றோமோ என்ற எண்ணம் தோன்றி மங்கலாய் என் மனதில் வெளிச்சம் போடுகிறது......

ஆனால் அட்சய பாத்திரமாய் இருக்க என்ன செய்ய போகிறோம்... அல்லது தெரியாமல் மறைந்து இருக்கும் அட்சய பாத்திரமாய் இருப்பதை காட்டிலும் இப்படி இருப்பது மேலோ என்றும் இந்த குரங்கு மனது பாடு படுத்துகிறது.....

என்ன ஆசைகள் இருந்தாலும் அந்த பாத்திரங்கள் பத்திர படுத்த படுமேயானால் அது வெத்து பாத்திரமோ அட்சய பாத்திரமோ பரவாயில்லை.... வெத்து பாத்திரம் என்றால் நிரப்பி கொள்வோம், அட்சய பாத்திரம் என்றால் எடுத்து கொள்வோம்..... அளவான ஆசை என்றுமே இருக்கும் போது ' அனைத்துக்கும் ஆசை படு' என்று தையிரியமாக சொல்லலாம் என்று நினைக்கிறேன்!!!!