Thursday, August 20, 2009

ஆண்களுக்கான மறுவாழ்வு மையம் - தலைப்பு சரி தான் (எழுத்து பிழை இல்லை!!!)

இதுவரை எவ்வளவோ காலங்களாக பெண்களை அடிமைப்படுத்தி தான் ஆண் சமூகம் தனது ஆதிக்கத்தை காண்பித்து வந்தது. எத்தனையோ கொலைகள் (மனதளவிலும், உயிர் போகும் அளவிலும்) நிகழ்ந்துள்ளன. பொங்கி எழுந்தும் அமைதியாக மறந்தும் பல நிகழ்வுகளை நாம் மறந்து போய் இருக்கிறோம். எத்தனையோ பெண்கள் இப்பொழுதும் அமைதியாக இப்படியான கொடுமையான நிலையில் வாழ்ந்துதான் வருகிறார்கள். 'அடிச்சி ஒதச்சி பொண்ணுங்க கிட்ட வீரத்த காமிக்கிற பொட்ட பசங்களை போட்டு தள்ளனும்' என்ற அளவுக்கு நாம் கோபத்தில் உச்ச நிலைக்கு அனுப்பியுள்ள சம்பவமெல்லாம் நடந்திருக்கின்றது.

அப்போதெல்லாம் ஏன் இப்படி நடக்கிறது, எப்போதுமே இப்படி அடக்கி அடக்கி வெச்சிருக்கோம், ஒரு நாள் எல்லாருமாக மிரள வைக்க போகிறார்கள் என்ற பயமும், ஒரு வித பரிதபாமும் தோன்றியிருக்கிறது. பரிதாபம் என்று சொல்லி பெண்களை மூலைக்கு கொண்டு சென்று முடக்கி வைப்பதல்ல என் எண்ணம். ஆனால் சிறிது நாட்களுக்கு முன், நான் செய்தித்தாளில் படித்த செய்தி கொஞ்சம் நெருடலாகவே இருந்தது. இதெல்லாம் நம் முன்னோர்களால் அவதி பட்ட பெண்கள் ஆண் வர்க்கத்திற்கு கொடுத்த சாபம் இப்பொழுது விஸ்வ ரூபம் எடுத்திருக்கு. இல்லை எப்போதோ எடுத்திருக்கலாம் நமக்கெல்லாம் இப்போதுதான் தெரிய வருகிறதா?

என்ன நடந்திருச்சி இப்படி அடி மேல அடியா பாத்து பாத்து, எழுதறீங்களே அப்படி என்று கேட்கும் கேள்விகளுக்கு பதில் - SIFF ( SAVE INDIA FAMILY FOUNDATION). பெண்களால் ஏதோ ஒரு விதத்தில் துன்புறுத்த பட்டு, சோகத்தில் தத்தளிக்கும் ஆண்களெல்லாம் சேர்ந்து இந்த அமைப்பை துவங்கி உள்ளனர். அவர்களின் கோரிக்கை இரு பாலர்களையும் சமமாக நடத்துங்கள். பெரும்பாலான சமயங்களில் தவறு பெண்கள் தரப்பில் இருந்தாலும் ஆண்களை தண்டிக்கும் ஒரு சமூகத்திலும், அதற்கு உதவியாக இருக்கும் சட்டங்களுக்கு நடுவில் தான் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நன்றாக யோசித்து பார்த்தால் சாலையில் ஒரு பெண் தவறாக குறுக்கில் வந்து விழுந்து இருந்தாலும், ஓட்டியது ஆணாக இருந்தால் பெண்டு கழட்டி விடுவார்கள். இதெல்லாம் நிதர்சனமான உண்மை. இல்லையென்று மறுக்க கூடியவர்கள் கம்மியாக தான் இருப்பார்கள்.

இப்படிப்பட்ட நேரத்தில் பெண்களுக்கு எதிரான இதை விட கொடுமையான விஷயங்கள் வேகமாக நடந்தேறி கொண்டிருக்கின்றன. அலைக்கழிக்கப்பட்டு இருட்டில் தள்ள பட்டு இருந்தவர்கள் இப்போது தங்களுக்கென்று ஒரு குழுமம் அமைத்து இப்போது வெளியில் தலை காட்ட துவங்கி இருக்கிறார்கள். அந்த காலத்தில் கிராமங்களில் சொல்லுவார்கள், அவக வீட்ல "மதுர ஆட்சியாம்" என்று. இதற்கு என்ன பொருள் என்றால், எந்த வீட்டை பற்றி பேசுராங்களோ அவக வீட்ல மனைவியின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என்பது பொருள். அதே போல் சிதம்பர ஆட்சி என்றும் சொல்லுவார்கள். அப்போதும் மதுரை ஆட்சி என்றால் தான் ஒரு குஷியோடு பேசுவார்கள் அதைப் பற்றி.

ஆக எப்பொழுதும் இந்த சமுதாயம் இப்படி நகைச்சுவைக்கு பேசிய விடயங்கள் இன்று உண்மையாக மாறி வருகின்றன. இப்படி ஒரு குழுமம் தொடங்கி ஆண்களை காப்பாற்றுங்கள் என்று கதற துவங்கி உள்ளனர். இதனை ஆராய்ந்து உண்மைகளை இந்த உலகுக்கு எடுத்து சொல்ல வல்ல ஒரு குழுமம் இது.உண்மையாக பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை தட்டி கேட்கும் உலகம், ஆண்களுக்கு நடக்கும் இந்த கொடுமைகளையும் உற்று நோக்க வைக்க தான் இந்த குழுமம் என்று சொல்ல படுகிரது. 'கிளம்பிட்டய்யா கிளம்பிட்டா ' என்று வரும் வடிவேலு அவர்களின் வசனம் போல கிளம்பியிருக்கும் பெண்களுக்கு இது ஒரு சவுக்கடி....

பின் குறிப்பு :இந்த பதிவு பெண்களின் மனதை புண்படுத்த அல்ல. மாறாக பெண்களில் கூட இப்படி கொடுமையாக பெண்கள் உள்ளார்கள் என்று பறைசாற்ற தான்!!!!மேலும் விவரம் அறிய இந்த இணைய தளத்தை சொடுக்கவும்!

http://www.saveindianfamily.org/

- MJV