Monday, December 14, 2009

அத்தான்....

விழியோர பார்வைகளும், விரல் போடும்
கோலங்களும் எங்களுக்கு
கிடைக்க வில்லை தான்,


பிறந்த நாள் பரிசுகளும், நித்திரைக்கு
வாழ்த்துக்களும் எங்களுக்கு
வாய்க்க வில்லை தான்,

காத்திருக்க கணங்களோ, பூத்திருந்த
பூக்களோ எங்களுக்கு
வாழ்வில் வரவில்லை தான்,

நீங்கள் தெரு முனை தாண்டும் வரை நானோ,
நான் பேருந்து சன்னலில் மறையும் வரை நீங்களோ
இடம் பெயரா நிமிடங்களில் தத்தளிக்க வில்லை தான்,

இருப்பினும், அந்த முதல் இரவில் 'அத்தான்'
என்ற நீ விக்கி அழைத்ததில் அத்தனை
அந்நியங்களும் அந்நியப்பட்டுதான் போயின...

- காவிரிக்கரையோன் MJV

பி.கு: இந்த கவிதையை
உரையாடல் கவிதை போட்டிக்காக எழுதி அனுப்பியுள்ளேன்!
இந்த இடுகையில் இதற்கான அறிவிப்பும் விதிமுறைகளும் இருக்கின்றன. நீங்களும் கலந்து கொள்ளுங்கள்!!!