Thursday, December 17, 2009

குறுங்கவிதைகள்....,

முத்தம்
சீன பெருஞ்சுவராய் நீண்டது என் பேச்சு,
இம், ம்ம்ம் என்று மட்டுமே நீ கேட்டு கொண்டிருந்தாய்,
ஐயோ போதும் என்று உன் இதழ் மௌனம் கலைத்ததில்
பிறந்தது நம் இதழ் முத்தம்,....

கவிதை
பொய்யாலானது கவிதை என்று எந்த
மடையன் சொன்னது?
இதோ என் அருகில் உண்மையாய் நீ!

பிரம்மன்
பூமியில் பிரம்மனின் முகம் உண்மையில்
நீ தான்,உன் அழகில் இது வரை எத்தனை
கவிகளைப் படைத்திருப்பாய்!!!

கவலை
பங்களா கதவிற்கு உள்ளிருந்த குழந்தைக்கு
தெருவில் இருக்கும் பாப்பாவுக்கு
வீடில்லையே என்ற கவலை,
தெருவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைக்கு
உள்ளே இருக்கும் பாப்பவோடு
விளையாட யாரும் இல்லையே என்ற கவலை.....

கோள வெதும்பல்
எத்தனை முறை சொன்னாலும் நீ
கேட்கமாட்டாய்,
பார் உன் சுவாச காற்று பட்டு பட்டு
நான், அண்டார்டிகா பனிக்கட்டியாய்
உருகிப் போகிறேன்....

- காவிரிக்கரையோன் MJV