Sunday, January 10, 2010

சம்பளமும் நற்கொலையும்!

சம்பளம்
படங்கள் அதிகம் பார்க்கும் கணவன்
எப்பொழுதும் மனைவிடம் சொல்வது
"இரவில் வேசியாகவும், பகலில்
வாசுகியாகவும் இருக்கவேண்டும்",
கணவனின் மனதை அதிகம் படித்த
மனைவி வெதும்பி என்றோ
ஒரு நாள் கேட்டது,
"இரவில் என்ன சம்பளம்?"

நற்கொலை
நாட்காட்டியின் தேதிகள் நற்கொலை செய்யப்படும்
பழக்கத்தில் தான்
புது வருடம் பிறக்கின்றதோ ?
சிந்தனையில் புது நாட்காட்டியை
சுவருக்கு காட்டிய தருணம்,
"அப்பா 1 ஆம் தேதிய மட்டும் கிழிக்க வேண்டாம்பா"
சொல்லி காற்றில் மறைந்தாள் ,
அந்த வருடம் புத்தாண்டு
ஞாயிற்று கிழமையில் பிறந்திருந்தது!

- காவிரிக்கரையோன் MJV

6 comments:

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

முதல் கவிதை சூப்ப்......பர்!

காவிரிக்கரையோன் MJV said...

@ பெயர் சொல்ல விரும்பவில்லை - வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரே. உங்கள் பெயர்தான் சொல்லிடுங்களேன்!

தியாவின் பேனா said...

அருமையான நிதர்சன கவிவரிகள்

காவிரிக்கரையோன் MJV said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி தியா.

பா.ராஜாராம் said...

ரெண்டு கவிதையும் ரொம்ப பிடிச்சிருக்கு காவிரி.

காவிரிக்கரையோன் MJV said...

வாருங்கள் பா.ரா. என் வலைபூவிற்கு வந்ததில் மெத்த மகிழ்ச்சி. பின்னூட்டத்திற்கும் உற்சாகத்திற்கும் நன்றி....