Thursday, January 14, 2010

சாவி வைத்த சாளரக் கதவில் வறுமையும் காக்கையும்...

சாவித்துவாரம்
சாவி துவாரத்தில் சாவியின்
தீண்டல் வெளிச்சம்,
அதில் விழி மடல்களின்
தீண்டல் விரசம்....

சாளரம்
சாளரத்தில் காற்று வர
வேலைப்பாடுகள் வைத்த கட்டுமான
நிபுணருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை,
அதற்கு அப்பால் இருந்த
பெண்ணின் அந்தரங்கம்
விலைபோகப் போகிறதென்று...


கதவு
கதவைத் திறங்கள்
காற்று வரும் என்கிறார்கள்,
தட்டிப் பாருங்கள்
கதவுத் திறக்கும் என்கிறார்கள்,
புரிந்தல் தொலைந்து போய்,
வெடித்து சிதறிய மிச்சத்தில்
கதவு கிடைக்கிறதா என்று
தேடிக் கொண்டிருந்தது குழந்தை...


வறுமை
கொல்லைபுறத்தில் காய்த்து குலுங்கும்
முருங்கை நிழலுக்கும்,
கால் தடங்கள் பதிய ஏங்கும்
நீண்ட தாழ்வாரத்திற்கும்
தெரியாது வறுமைக்கு விலை
போயின வீட்டின் பத்திரங்கள் என்று...


காக்கை
அசுத்தம் செய்தாலும் காந்தியின்
சிலை வழியேனும் பயணிக்கிறது
ஐந்தறிவு காக்கைகள்!

- காவிரிக்கரையோன் MJV

6 comments:

அன்புடன் அருணா said...

தலைப்பும் கவிதைகளும் அருமை!

ஈரோடு கதிர் said...

அருமை

காவிரிக்கரையோன் MJV said...

@ அன்புடன் அருணா - வருகைக்குக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள். பொங்கல் வாழ்த்துக்கள்.
@ ஈரோடு கதிர் - வாங்க கதிர். நன்றி மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.

பா.ராஜாராம் said...

முதல் கவிதை சும்மா,சிச்சர்!

பா.ராஜாராம் said...

முதல் கவிதை சும்மா,சிக்ஸ்சர்!

காவிரிக்கரையோன் MJV said...

வாங்க பா.ரா. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி தலைவரே.