இயற்கைதானே
கொட்டும் மழைக்கு
குடைகள் இயற்கை என்றால்,
இருட்டும் மாலைக்கு நிலா
வெளிச்சம் இயற்கை என்றால்,
நம் காதலுக்கு உன் முதல் சொல்,
"செருப்பு பிஞ்சிடும்"
என்பதும் இயற்கை தானே!!!
மரப்பலகை
மரப்பலகையை மிதித்த
குழந்தையை தொட்டு கும்பிடச்
சொன்னதும் மீண்டும் மீண்டும்
மிதித்து பார்த்துத் தொட்டு
கும்பிட்டு கொண்டே இருந்தது
குழந்தை!
உறுதிமொழி
பணப் பற்றாக்குறைக்கு
தான் உபயோகிப்பேன் உறுதிமொழி
எடுத்த கடன் அட்டை அனைத்தையும்
குழிப்பறித்த தருவாய்,
செய்வதறியாமல் இரண்டாவது
கடன் அட்டைக்கு விண்ணப்பப்படிவம்
பூர்த்தி செய்தபடி நான்!
ஒற்றை மேசை
ஒரே ஏவுகணை இரண்டு
இடங்களை அழித்த நிகழ்வைப் பற்றிக்
கேட்டிருக்கிறீர்களா?
நடந்ததே நேற்று எனக்கும் என்
நண்பனுக்கும்,
மாறிப் போன கடிதங்களில் மாறி
போன பெயர்கள்,
பழியை ஏற்ற படி நட்சத்திர
வானத்திற்கு சாட்சியாய்
எங்கள் அறையின் ஒற்றை மேசை!
நிலா
கிணற்றுத் தவளைகளுக்கு
தெரிந்திருக்குமா கிணற்றுடன்
கண்ணாம்பூச்சி ஆடும் நிலா
கிணற்று நிலா இல்லை என்று?
புனைப்பெயர்
புதிதாய் காதலிக்க தொடங்கிய
எனக்கு கவிதை எழுதிப் பார்த்தால்
என்ன என்ற வினா எழுந்தது,
தீவிரமாய் கவிதைக்கு வார்த்தைகளையும்
பாடுபொருளையும் தேடிகொண்டிருந்தேன்
கிடைக்கவே இல்லை,
என்னடா இது காதலும் கவிதையும்
இரட்டைப் பிறவிகள் இல்லையா,
இந்நேரம் 30, 40 தாள்கள் நிறைந்திருக்குமே,
மனக்கிடங்கு ஓர் ஓரமாய் புனைப்பெயர்
தேடிக் கொண்டிருக்க கவிதை எங்கிருந்து
வரும்?
"ஓட்டை வாலியில் தண்ணீர் பிடிக்க
ஓராயிரம் பேர் வரிசையில நின்னாங்களாம்!"
- காவிரிக்கரையோன் MJV
இது வரைக்கும் வந்து விட்டீர்கள். மத்தவங்களும் படிக்கட்டுமே, கீழே இருக்கும் பொத்தானை கொண்டு ஓட்டு போட்டு எல்லோரும் இந்த இடுகையை வாசிக்கும் படி செய்யுங்கள்
5 உங்கள் எண்ணங்கள்:
கொட்டும் மழை, மாலை நிலான்னு பார்த்ததும் எது பெருசா சொல்ல்வரிங்கனு நினைச்சன், ஆனா நெத்தி அடி அடிசிட்ங்க, வையரு குலங்க குலங்க சிரிச்சன்.
மரப்பலகை மற்றும் நிலாவும் அருமை. - மயில்
வா மயில் முதல் முறையா வந்திருக்கேள். வருக வருக. அனுபவம் கொஞ்சம் கற்பனை இதுதானே கவிதை!!!!
கவிதை சூப்பரு
வாங்க புலிகேசி. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரே....
Post a Comment