Sunday, February 14, 2010

எம்.ஜேயின் மிச்ச சொச்சங்கள் - 14/02/2010

இவ்வளவு நிலைகளில் இந்த சமூகம் உயர்ந்திருந்தாலும், இன்னமும் ஆன்மீகத்தை ஒரு கருவியாக பயண்பாட்டில் வைத்திருக்கும் நபர்கள் அதிகமாக இருந்து கொண்டு தான் வருகிறார்கள். இதற்கு உதாரணமாக சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்வு அமைந்திருந்தது. ஓர் ஊரில் ஒதுக்குப்புறமாக ஒருவரின் இடம். அதில் ஒரு முனியப்பன் கோவில். அந்த பக்கம் வரும் பக்தர்கள் வழிப்பட்டுக் கொண்டு செல்வார்கள். அந்த இடத்திற்கு அருகில் 6 அல்லது 7 ஆண்டுகளுக்கு முன் ஒருவர் குடியேறுகிறார். 2 பிள்ளைகள் மனைவி என்று குடும்பம் சூழல் இருக்கிறது. அவர்கள் சொற்ப வருமானத்திற்கு துணிகளை அயன் செய்து தருபவர்கள். அவரின் இளைய மகன் அந்த கோவிலை சுத்தபடுத்தி விட்டு தினமும் பெரும்பாலான பொழுதுகளை அங்கேயே கழித்து வருகிறார். இவர் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். திடீரென்று ஒரு நாள் பல நாட்களாக அங்கேயே சுற்றித் திரிந்ததாய் சொல்லப்படும் பாம்பு அவர் மேல் விழ பதறியடித்து வீட்டிற்கு சென்று சொல்கிறார். வந்து பார்க்கையில் அந்த பாம்பு மரச்சிலையாக மாறிவிட்டதாம். அவ்வளவுதான் அந்த இடத்தில் சிறிது நேரத்திற்கெல்லாம் ஆயிரக்கணக்கில் மக்கள் சூழ்ந்து இந்த பையனை தெய்வமாகவும், அந்த இடத்தில் மிகப்பெரிய கோவில் அமைக்க வேண்டியும் போராட்டம் நடத்துகிறார்கள். இதை என்னவென்று சொல்வது!!! 3 விடயங்கள் எனக்குள் நெருடலை உண்டு செய்கிறது!
1. அந்த இடத்துக்கு சொந்தக்காரிடமிருந்து வெகு விரைவில் அந்த நிலம் பறிக்கப்படலாம்.
2. அந்த சிறுவன் முழு நேர பூசாரியாக மாற்றப்படலாம்.
3. அந்த சிறுவனின் படிப்பு முழுவதுமாக பாதிக்கப்படலாம்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சென்ற மாதக் கடைசியிலிருந்தும், இந்த மாத முதல் இரு வாரங்களிலும் நாங்க ஒரே பிஸியோ பிஸி. ஏனென்றால் இது அப்ரைசல் நேரம். சட்டென்று கடந்து விடும் ஒவ்வொரு வருடமும். ஆனால் அதன் முடிவில் அமர்ந்து கடந்த வருடத்தில் என்ன செய்தோம், யாரிடம் பாராட்டு, யாரிடம் ஆப்பு இப்படி எல்லாவற்றையும் நினைவலையில் தேடி எடுத்து முடித்து, என் மானேஜரிடம் சென்று ஒரு 2 முதல் 3 மணி நேரம் மொக்கைப் போட்டு, வெளியில் வந்து, ஆத்தா நான் ஃபஸ்ட் க்ளாசில் பாஸ் பண்ணிட்டேன் என்று சொல்வது போல வந்து நண்பர்களிடம், "மச்சான் பிரிச்சிடோம்ல இந்த வாட்டினு" சொல்லி, கையில் மறுபடியும் சம்பளம் வரும்போது, என்னடா மாப்ள, 500 ஓவாதான் அதிகமா வருதுன்னு சொல்லிட்டு மீண்டும் அடுத்த வருடைத்தை நோக்கி பயணிப்பதில் தான் எத்தனை களைப்பு! பயணம் தொடங்கும் முன்னரே இப்படி ஒரு களைப்பு!!!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

யெப்பா அப்ரிடி நீங்க ரொம்ப பெரிய ஆள்பா. அன்றைக்கு ஒரு நாள் மாலையில் பானம் அருந்திக் கொண்டிருக்கையில், மொஹமத் ஆசீப் பந்து வீச்சின் போதுதான் அப்ரிடி பந்தை கடித்து பிரச்சனையில் மாட்டிக்கொண்டார் என்று பேசிக் கொண்டிருந்தேன். உடனே நண்பர் ஒருவர் 1000 ரூபாய் பந்தயம் என்றார். அந்த பந்து வீச்சாளர் ரான நவீத் என்றார். சரி கிரிக்கெட்டில் நமக்கு கொஞ்சம் விடயம் தெரியும் என்பதால் சட்டென்று ஒத்துக் கொண்டேன். சரி எப்படி ஜெயித்தவரை நிர்ணயம் செய்வது, என்றவுடன் நோக்கியா பதிப்பகத்தில் (இந்த வார்த்தை பயன்பாட்டிற்கான உரிமை முழுவதும் நர்சிம் அவர்களையே சாரும்!) சட்டென்று யூ டுயூபில் போட்டுப் பார்த்தால் ரான நவீத் பந்து போட செல்லும் பொழுதுதான் அப்ரிடி பந்தை கடிக்கிறார். நான் தோல்வியை ஒத்துக் கொள்ளாமல் பல பல்புகள் வாங்கிய பிறகும் அசராமல் இல்லை என்று சாதித்து விட்டு வீட்டிற்கு வந்தேன். சரி உண்டு விட்டு யு டுயூபில் பார்த்தால் இரு முறை அதே ஆட்டத்தில் மனுஷன் பந்தை பதம் பார்த்திருக்கிறார். அவர் ரொம்ப நல்லவர். எனக்கு 1000 ரூபாய் தப்பித்தது!!!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சேனைகளும் சேனாக்களுமாக சேர்ந்து நம் தாய் மண்ணை பதம் பார்த்து விடும் போலிருக்கிறது. என்ன செய்வதென்றே தெரியாமல் விழி பிதுங்கும் அரசாங்கம், நடிகர், கிரிக்கெட் வீரர் என்று அனைவரையும் நன்றாக பதம் பார்த்து வருகிறது. மீடியாக்கலும் அசராமல் பேட்டிகளை அள்ளி தெளித்துக் கொண்டுள்ளது. மும்பை முதன் மந்திரியை வர வைத்து வாங்கி கொண்டிருக்கிறார் ராஜ்தீப். சரி இதெல்லாம் நடக்கட்டும் இவர்கள் எப்போது திருந்துவார்கள் என்று வழக்கம் போல் இடுகை ஒன்றை இட்டு விட்டு அமைதியாக இருக்கிறார் ராஜ்தீப். கொஞ்சம் கூட பயப்படமால் மனுஷன் ஒரு இடுகையை இங்கே இட்டிருக்கிறார். அவருக்கு ஒரு ஷொட்டு (ஆ.வி பாணியில்)!!!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மீண்டும் இந்த தீவிரவாதம் தலை தூக்க தொடங்கி விட்டது. பூனாவில் ஜெர்மன் பேக்கரியில் இன்று சக்த்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்திருக்கிறது. என்ன செய்வது ஏது செய்வது என்று தெரியாமல் மக்கள் தெறித்தோடிய காட்சி மனதை கனக்க செய்கிறது. அது ஒரு சாதாரண நிகழ்வாக போய் விட்டது இந்தியாவில். மெல்ல தலை தூக்குகிறது பாகிஸ்தான் போன்ற நிலை இந்தியாவிலும். இந்த நிலை நீடிக்கும் என்றால் வாழ்வதற்கே பயந்து போகும் சூழ்நிலை வெகு தொலைவில் இல்லை. நந்தன் நிலக்கனி தலைமை தாங்கிக் கொண்டிருக்கும் யுனிக் ஐடி வந்தால் வெகுவாக ஊடுறுவல்களை தடுக்கலாம் என்று நினைக்கத் தோன்றுகிறது...

- காவிரிக்கரையோன் MJV

4 comments:

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

மிக அருமையான பதிவு.

மகாராஷ்டிரா குறித்து துக்ளக்கின் இந்த வார தலையங்கம் அனைவரும் படிக்க வேண்டும். எப்போதுமே, மதவாதக் கட்சியாக பார்க்கப் பட்டுக் கொண்டிருக்கும் பா.ஜ.க.வும் அதன் தோழமை குழுவான ஆர்.எஸ்.எஸ்ஸும் முதன் முதலாக குரல் கொடுத்தபிறகுதான் காங்கிரஸ் சிவசேனையை எதிர்க்கத் தொடங்கியிருக்கிறது என்பதை அழகாகக் கூறியிருக்கிறார்.

காவிரிக்கரையோன் MJV said...

@ பெயர் சொல்ல விருப்பமில்லை - வாருங்கள். வருகைக்கும் உற்சாகத்திற்கும் நன்றி. யார் குரல் கொடுத்தாவது அவர்கள் ஒடுக்கப்பட வேண்டும்... நமக்கு தேவை அவ்வளவே!!!! கண்டிப்பாக அதைப் படிக்கிறேன்.

தியாவின் பேனா said...

அருமையான பகிர்வு வாழ்த்துக்கள் .

காவிரிக்கரையோன் MJV said...

@ தியாவின் பேனா - வாங்க தியா. வருகைக்கும் உற்சாகத்திற்கும் நன்றி.