Wednesday, February 3, 2010

இரும்பிலொரு தொடர்கதை...

இரும்பணுக்களின் ஆதிக்கத்தில் பல
சாளரக் கதவுகளும் சில உயிரணுக்களுமாய்
சேர்ந்து இழுத்துப் போகிறார்கள்,

சில கிராமங்களும் அதில் பல
நகரங்களுமாய் சுடு நீர் பட்ட
காலாய் துடித்து ஓடுகிறாய்,

நட்பிற்கு ஒரு கவிதையாய்
நீயும் வாளமும் கைப் பிடித்து
மானுடத்துக்கு பாடம் சொல்கிறாய்,

வாளம் பிரிந்த நீயோ உன்னைப்
பிரிந்த வாளமோ தனித்து இருக்க
கூட நினைப்பதில்லை,

வாளங்களைத் தனியாகவோ
உன்னைத் தனியாகவோ
யாரும் பிரித்து சிறார்களுக்கு
கதை கூட சொல்லுவதில்லை,

செல்ல மகளுக்கு வியப்பாய்,
என் வயதான பாட்டிக்கு பூரிப்பாய்,
எங்களுக்கு சொகுசாய்,
சுமந்து கொண்டு மீண்டும்
ஓர் அத்தியாயம் தொடங்கியது
இரயில்பயணத்தில்!!!

- காவிரிக்கரையோன் MJV

P.S: மேலே இடம்பெற்றுள்ள கவிதை யூத்ஃபுல் விகடன் இணைய தளத்தின் முகப்பு பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. அதை காண கீழ்கண்ட இணைய தள முகவரியை சொடுக்கவும். எனக்கு தொடர்ந்து ஊக்கம் அளித்து வரும் அனைவருக்கும் நன்றி. யூத்புல் விகடன் குழுவினருக்கு நன்றி !
http://youthful.vikatan.com
http://youthful.vikatan.com/youth/Nyouth/kavirikariyonpoem300110.asp

5 comments:

Sathish Mayil said...

கடைசி வரியை படிக்கும் வரை என்ன சொல்ல வரிங்கன்னு கொஞ்சம் கொழப்பமா தான் இருந்தது, அப்புறம் தான் புரிஞ்சிது. நல்ல கவிதை.

இந்த மாதிரி நடைக்கு ஏதாவது பெயர் உண்டா?

யூத்ஃபுல் விகடனில் கவிதை இடம் பெற்றதுக்கு வாழ்த்துகள்.

இந்த பதிவினால் தான் விகடுன்க்கு இப்படி ஒரு இணைய தளம் இருப்பது தெரிய வந்தது, ரொம்ப நன்றி.

Madurai Saravanan said...

nalla kavithai . thandavaalamaai thodarvom nam payanaththai. vaalththukkal

கனிமொழி said...

//கடைசி வரியை படிக்கும் வரை என்ன சொல்ல வரிங்கன்னு கொஞ்சம் கொழப்பமா தான் இருந்தது, அப்புறம் தான் புரிஞ்சிது.//
ஆமாங்க.. எனக்கும்..
நல்ல கவிதை...
வாழ்த்துக்கள்...

காவிரிக்கரையோன் MJV said...

@சதீஷ் - வா மயில். இது போன்ற நடை ஒன்று உண்டு என்பது மட்டும் எங்கேயோ படித்த மாதிரி நியாபகம். தேடித் பார்த்து பெயர் கண்டு பிடித்து சொல்கிறேன். முடிவில் தான் தெரிய வேண்டும் நேட்று எண்ணம் கொண்டு எழுதியதால் வந்த வினை!!!! தான் அது.... வருகைக்கு நன்றி. மேலும் பல தமிழ் மின்னிதழ்கள் இருக்கின்றன. திண்ணை.காம், கீற்று.காம், சொல்வனம்.காம், அகநாழிகை.காம், உயிர்மை.காம் என்று பல உள்ளன. நேரம் கிடைக்கும் பொழுது சென்று பார்க்கவும்.
@மதுரை சரவணன் - வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
@கனிமொழி - வாங்க கனிமொழி. நன்றி, அது கடைசி வரியில் தான் புரிய வேண்டும் என்பதற்காக எழுதியது!!!

Sathish Mayil said...

கிற்று, திண்ணை, உயிர்மை படிச்சிருக்கன். மற்றவை பார்த்தது இல்லை, நேரம் கிடைக்கும் பொழுது பார்க்கிறேன், அறிமுகம் தந்தமைக்கு நன்றி.