Wednesday, February 3, 2010

திண்ணையில் அமர என் கவிதைக்கு கிடைத்த வாய்ப்பு...

திண்ணையில் அமர்ந்து இருப்பதே ஒரு சுகம் தான். லேசான மழை, சுள்ளென்ற வெயில், சிறார்களின் விளையாட்டு, பக்கத்துக்கு வீட்டு கதைகள், வெளிச்சமான இரவுகள், கதைகள் முடியாத நாட்கள் என்பது போன்ற பல மறக்க இயலாத நினைவுகள் சுமந்திருப்பது இந்த திண்ணை தான். இந்த திண்ணை பற்றி ஓர் இடுகை இட எத்தனித்து இருந்த வேளையில் கண்ணில் பட்டது தான் திண்ணை மின்னிதழ்.

இப்பொழுது எனக்கெல்லாம் கிடைக்காத ஒரு பாக்கியம் என் கவிதைக்கு கிடைத்துள்ளது. சரி விடுங்க இந்த இடுகையில் நான் எழுதியிருந்த இயற்கை தானே என்ற கவிதை திண்ணை இதழில் பிரசுரமாகி உள்ளது. கவிதை முதலில் பிரசுரமானதால் திண்ணை பற்றிய இடுகை எழுதுவதற்கு முன் இந்த அறிவிப்பு (விடுங்கப்பா முதன் முதலில் பிரசுரமானால் அப்படி ஒரு விளம்பரம்தான்) வந்ததால் அந்த இடுகை வெகு விரைவில் வரும்!!!

எனக்கு தொடர் ஆதரவு அளித்து வரும் பதிவுலக நண்பர்களுக்கும், மற்றும் அனைவருக்கும் என் நன்றிகள். திண்ணை குழுவினருக்கும் என் நன்றிகள்....

- காவிரிக்கரையோன் MJV

7 comments:

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துக்கள். தொடருங்கள்!

காவிரிக்கரையோன் MJV said...

@ ராமலக்ஷ்மி - வாங்க ராமலக்ஷ்மி. வருகைக்கும் உற்சாகத்திற்கும் நன்றி. உங்கள் முத்துச்சரத்தையும் அதிகம் ரசிக்கிறேன். வாழ்த்துக்கள்.

Matangi Mawley said...

congrats!! good blog u ve here.. very interesting words...

Sathish Mayil said...

வாழ்த்துக்கள் கவிரிக்கரையோன்

காவிரிக்கரையோன் MJV said...

@ Matangi Mawley - வாங்க மாதங்கி. வருகைக்கும் உற்சாகத்திற்கும் நன்றி.

@ சதீஷ் - வா மயில். வருகைக்கு நன்றி.

Sivaji Sankar said...

வாழ்த்துக்கள்.. படையல் நன்று.!

காவிரிக்கரையோன் MJV said...

@ சிவாஜி ஷங்கர் - வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி ஷங்கர்.