Saturday, February 6, 2010

குறுஞ்செய்தி...

குறுஞ்செய்தி
தட்டி தட்டி தேய்ந்து கொண்டிருந்தன
நம் விரல் ரேகைகளும் நம்
அலைபேசி பொத்தான்களின் ஆயுளும்!

சாளரம்
அக்கால காதல் சாளரத்தின்
பின்னே வளர்ந்து வாழ்ந்தது
இக்கால காதல் சாளரத்தின் (விண்டோஸ்)
ஊடே வளர்ந்து கண்டங்கள் கடக்கிறது!

சிறை
இரும்புக் கதவுடைத்து
திருடியவன் இரும்பு கம்பிகளுக்கு
பின்னால் சிறை வைக்கப்பட்டான்,
மனக் கதவை உடைத்து
உன் இதயத்தை கொள்ளை
அடித்தவனை நீ எங்கே சிறை
வைக்கப் போகிறாய்?

காலை
அலைகளுக்கு இல்லா சோம்பலையும்
பருந்துக்கு இல்லா சோர்வையும்
எனக்கு கொடுத்து,
என் அறையில் சிறிதளவு
மீதமிருந்த வெப்பக்காற்றையும்
அநியாயமாய் பிடுங்கிச்
சென்றது மார்கழியின்
கடும்பனிக்காலை....

பல்லி
பசிக்கு கத்தும் பல்லியை
கடவுளின் குரல் என்று
சொல்லும்போதும், பிச்சை
எடுக்கும் சிறுவனிடம் இல்லை
என்று கை ஆட்டும் போதும், உதாசீனம்
மட்டும் தானே செய்கிறோம்
பல்லியின் பசியையும், சிறுவனின் பசியையும்...

- காவிரிக்கரையோன் MJV

4 comments:

புலவன் புலிகேசி said...

சூப்பர்..

பா.ராஜாராம் said...

எல்லா கவிதைகளும் நல்லாருக்கு காவிரி!

காவிரிக்கரையோன் MJV said...

@புலவன் புலிகேசி - வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி புலிகேசி...
@ பா.ரா - வாங்க பா.ரா. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

Madurai Saravanan said...

nanraaka irukkirathu.