Friday, February 12, 2010

மௌனமாய் ஒரு விரதம்...

"இன்றைக்கு மௌன விரதம்" , தாள்
நிறப்பி அனுப்பிய பின்
கண்ணால் வார்த்தைகள் வார்த்து

நீ கோர்த்த வாக்கியங்கள் எனக்கு
புரியவில்லை என்ற பயமேன் உனக்கு?
இதயத்தின் துடிப்பு இதயத்துக்கு
அந்நியமாய்ப் போய் விடுமா?

புல்லிடுக்கு பனித்துளிக்கு
பகலவன் கண்கள் எதிரியாய்
போன கதை தெரிந்திருக்கும்தானே
உனக்கு,

அப்படி உன் விரதம் வீழ்த்த என்
கண்களும் உன் கண்களும் தயார்
நிலையில் இருப்பது தெரியவில்லையா?

நீ முடிப்பதாய் தெரியவில்லை,
நானும் முடிக்க சொல்வதாய் தெரியவில்லை,
அதுவரை

விரதங்கள் கோபிக்கும் உன் மௌனத்தை

நீ தகர்த்தெறியும் அந்த மணித்துளிகளின்
வரவுக்காய் காத்திருக்கிறேன் நான்...

- காவிரிக்கரையோன் MJV

நன்றி - திண்ணை குழுவினருக்கு. திண்ணையில் அமர்ந்த என் கவிதையை காண இந்த இணைப்பை சொடுக்கவும்...

5 comments:

புலவன் புலிகேசி said...

திண்ணையில் மெல்ல நல்ல தீணிதான் இந்தக் கவிதை..வாழ்த்துக்கள்

காவிரிக்கரையோன் MJV said...

நன்றி புலி, உங்கள் வாழ்த்துக்களுடன் தொடருகிறேன்!!!

ராமலக்ஷ்மி said...

தொடர்ந்து இணைய இதழ்களில் உங்கள் படைப்புகளைக் கவனித்து வருகிறேன். வாழ்த்துக்கள்!

Madurai Saravanan said...

vaalththukkal. nalla kavithai.

காவிரிக்கரையோன் MJV said...

@ ராமலக்ஷ்மி - வாங்க ராமலக்ஷ்மி மேடம். உங்கள் உற்சாகத்திற்கும் வருகைக்கும் நன்றி. உங்கள் படைப்புகளை நான் பல இடங்களில் பார்த்திருக்கிறேன். பின்புதான் முத்துச்சரத்தை அறிந்து கொண்டேன். வாழ்த்துக்கள்....

@Madurai saravanan - வாங்க சரவணன். நன்றி உங்கள் வருகைக்கும் உற்சாகத்திற்கும்....