Saturday, February 20, 2010

கரையான் அரித்த மனிதர்கள்...

பெரியண்ணன் வேகமாய் நுழைந்து
எண்பது குழி நிலம், அப்பா விட்டுட்டுப்
போன நகையில் பத்து பவுன்
என்றார்,

வானம் பார்த்து வெறித்திருந்த
தம்பி பெரிய வீடு, கடலைக்
கொல்லை, நகையில ஒரு அஞ்சு
பவுனும் வந்திடனும்னார்,

நிலம் நோக்கியிருந்த அக்காள்
ஒருத்தி, விளைச்சல் நிலம்,
அம்மாவோட பட்டு புடவ
வாய்க்கா பாத்த வீடும்னா,

பக்கவாட்டில் கேட்டுக் கொண்டிருந்த
இன்னொரு அக்காள், "சவுக்கத் தோப்பு
எனக்கும் எண்பது குழி நிலம், ஆறு
பவுன் நகை வரல பாத்துக்கிடுங்க",

"ஆத்தா படமும் அய்யா படமும்
இருந்தா எனக்கொன்னு கொடுத்துடுங்க"
கனத்த மனதின் கடைசி சொட்டு நீருடன்
கடைக்குட்டி தம்பி கேட்க,

கரையான் அரித்த சட்டத்தில்
சுமங்கலியாய் போன இவங்க ஆத்தாவும்
கூடவே போன இவங்க அய்யாவும்
இன்னமும் புன்னகைத்தபடியே
இருந்தனர்...

- காவிரிக்கரையோன் MJV

4 comments:

அகநாழிகை said...

நல்லாயிருக்கு MJV

//கரையான் அரித்த சட்டத்தில்
சுமங்கலியாய் போன இவங்க ஆத்தாவும்
கூடவே போன இவங்க அய்யாவும்
இன்னமும் புன்னகைத்தபடியே
இருந்தனர்...//


அருமை.

காவிரிக்கரையோன் MJV said...

வாங்க வாசுதேவன். வருகைக்கும் உற்சாகத்திற்கும் நன்றி.

Madurai Saravanan said...

aarumai . thamilan vaalvai kan moon kavithaiyaai niruththeeteengka. vaalththukal

காவிரிக்கரையோன் MJV said...

வாங்க சரவணன். உங்கள் வருகைக்கும் உற்சாகத்திற்கும் நன்றி...