Sunday, February 14, 2010

பயம் வளர்க்கும் சுதந்திரம்...

ஏன் இப்படி குரோதமாய் பேசுகிறீர்கள்
நாய் வளர்த்த ஒருவர் என்னைப்
பார்த்து கேட்டுப் பார்க்கிறார்,

கோப நிழல்கள் என்னைத் தொடர்ந்தது
உண்மைதான் எத்தனை முறை சொல்லியும்
அந்த நாய் கட்டப்படாமலேயே அலைகிறது,

இத்தனை முறையும் என் மனைவியின்
பயம்தான் என்னைப் பேச வைத்திருக்கிறது
தெரியுமா உனக்கு என் வீட்டிலும் நாயெனும்
ஜீவன் வாழ்கிறது,

பயம் பற்றிய ஒருவரிடம் அதுவும் நாய்
பயம் பற்றிய ஒருவரிடமிருந்து
அந்த பயத்தை இம்மி அளவு கூட
நகர்த்திப் பார்க்க முடியாது,

தடுப்பூசி போட்டு தட்டில் சாதமும் பாலும்
வைக்கும் உனக்கு தெரிந்திருக்க நியாயமில்லை
எப்படி துரத்தி பார்க்கும் மற்றவர்களை
அந்த ஜீவன் என்று,

அந்த நாய் கடித்து பார்த்ததில்லை
என்ற உள்ளத்து உணர்வுகள்,
பயம்பற்றிய ஒருவரிடம் எப்போதும்
செல்ல மறுக்கும் சித்தாந்தங்கள் தான்,

கடித்தாலும் ஒன்றும் ஆகாது என்று
கூட சொல்லத் தயங்குவதில்லை
உங்கள் சிந்தனைக் கூடங்கள்,

இத்தனைக்கும் அப்பால் வெளியில் மிரட்டும்
சுதந்திரம் கொண்டு, சுதந்திரம்
பறித்த அந்த ஜீவன் கட்டிய இழை
அறுத்து ஓடிக் கொண்டுதானிருக்கிறது,

பயத்தினால் அழிக்கப்பட்ட சுதந்திரம்
சாளரக் கதவிடுக்கில் எட்டிப் பார்க்கிறது,
பயத்தினால் வளர்ந்த சுதந்திரம்
கதவுக்கப்பால் நாலு கால் பாய்ச்சலில்
ஓடி பயமுறுத்துகிறது!!!

- காவிரிக்கரையோன் MJV

3 comments:

Madurai Saravanan said...

/en veetilum naai ennu jenmam valukirathu / appadi enna kobam. eni how vaalththukkal . kavithai rusikkirathu.

கனிமொழி said...

:-) நல்லா இருக்குங்க...

//பயத்தினால் அழிக்கப்பட்ட சுதந்திரம்
சாளரக் கதவிடுக்கில் எட்டிப் பார்க்கிறது,
பயத்தினால் வளர்ந்த சுதந்திரம்
கதவுக்கப்பால் நாலு கால் பாய்ச்சலில்
ஓடி பயமுறுத்துகிறது!!!
//

அழகா சொல்லி இருக்கீங்க...

காவிரிக்கரையோன் MJV said...

@Madurai Saravanan - வாங்க சரவணன். நன்றி உங்கள் வருகைக்கும் உற்சாகத்திற்கும். நான் சொல்ல வந்தது, எங்கள் வீட்டிலும் நாய் வளர்க்கிறோம். அடுத்தவர்களுக்கு சிறிதும் இன்னல்கள் ஏற்படா வண்ணம் வளர்க்கிறோம் என்பதை சுட்டி காட்டதான் அந்த வரிகள். மற்றபடி நாய்கள் மீதான கோபம் அல்ல
அது!!!!

@ கனிமொழி - வாங்க கனிமொழி. வருகைக்கும் உற்சாகத்திற்கும் நன்றி.