Tuesday, March 16, 2010

என் முதல் மூன்றிலக்க இடுகை - 100ஆவது இடுகை!!!

வேகமாக ஓடுகின்ற நாட்கள். வேலையில் ஓய்வில்லை. ஓய்வை வேலையாக எடுக்கும் வயதும் இல்லை. இத்தனைக்கும் அப்பால் என் எண்ணங்களை பதிவு செய்து வைக்க வேண்டும் என்கிற எண்ணம் வெகு நாட்களாக இருந்து வந்தது. பொதுவாக கவிதைகள் எழுதுவது பிடிக்கும். எப்படி இவ்வளவு அலுவல்களிலும் தினம் ஓர் இடுகை பதிவு செய்கிறார்கள் என்ற வியக்கும் சிந்தனை இருந்ததுண்டு. எனக்கெல்லாம் நேரமே கிடையாது, அப்படி செய்வதெல்லாம், கடினம் என்று நினைத்தே 2008ஆம் ஆண்டு ஓடி விட்டது. முதலில் எழுத்துக்கள் பின்புதான் அலங்காரங்கள் என்பதை எடுத்து சொன்ன 2009ஆம் வருடம். இந்த வருடத்தின் பிற்பகுதியில்தான் வேகமாக இல்லை இல்லை விவேகமாக எழுத ஆரம்பித்திருந்தேன்.

இதோ இந்த இடுகையோடு 100 என்ற மூன்றிலக்கத்தை என் வலைப்பூ கடந்திருக்கிறது. இது ஒரு சாதனையா என்று யோசித்துப் பார்த்தால் ஆம் என்றே சொல்லத் தோன்றுகிறது. ஒவ்வொரு பதிவருக்கும் மனதில் ஒரு நிறைவு ஏற்பட்டிருக்கும் என்பதை இப்போது உணர்கிறேன். உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள, நாம் நினைப்பது அனைத்துமே சரி என்ற எண்ணங்கள் அகல இந்த பதிவுலகம் ஓர் நல்ல கூடமாக செயல் பட்டு வருகிறது. ஆரோக்கியமான முரண்பாடுகள் தேவை என்பதை சட்டென்று உணர்த்தி விட்டு போகிறது பதிவுலகம்.

எத்தனை முகம் தெரியாத நபர்களின் அற்புதமான எழுத்துக்களை அறிமுகம் செய்து வைத்திருக்கிறது. சில முகம் தெரியாத நபர்களின் நட்பையும் அறிமுகம் செய்து வைத்திருக்கிறது. எதை அடைகிறோம் இந்த இடுகைகளின் மூலமாக, படித்தலின் மூலமாக என்று யோசித்த காலங்கள் மலையேறிப் போய் விட்டன. வாசித்தல் என்ற விட்டுப் போன பழக்கத்தை தெரிந்து கொள்ள செய்திருக்கிறது இந்த பதிவுலகம். எந்த ஒரு பதிவருக்கும் மிக முக்கியமான ஒன்றான உற்சாகத்தை, மிகவும் சிரத்தையுடன் செய்கிறார்கள் இந்த பதிவர்கள். இப்பொழுது அந்த பதிவர்களில் நானும் அடக்கம் என்பது எனக்கும் பெருமைதான். ஒரு காலத்தில் பின்னூட்டம் இடாமல் சுற்றிக் கொண்டிருந்தவன் தான் நானும்.

என்ன பதிவுலகத்தில் இருந்தால் கண்டிப்பாக பின்னூட்டம் போட வேண்டுமா என்ற கேள்வி வரும்? ஆம் என்பது என் கருத்து. நம்மால் முடிந்த வரை, நேரம் ஒதுக்கி படித்துப் பார்த்து ஆரோக்கியமான பின்னூட்டங்கள் இடுவது சாலச்சிறந்தது! கருத்து மோதல்கள் இருப்பது கண்டிப்பாக தவறில்லை. அது ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்கிட எத்தனிக்கும். ஒவ்வொரு பதிவரும் தன் பொறுப்புணர்ந்து இடுகைகள் இடுவது இந்த பதிவுலகத்தை மென்மேலும் பலப்படுத்தும் என்பதில் சிறிது கூட ஐயப்பாடுகள் இல்லை. எத்தனை எத்தனை முக்கியமான கருத்துக்களை இங்கே கற்றுக் கொடுக்கிறார்கள் பதிவுலகத்தில்!!!

கவிதைகளின் அதிர்வுகள், கதைகளின் தாக்கங்கள், கட்டுரைகளின் ஆதிக்கங்கள், நிகழ்வுகளின் பரிமாற்றங்கள் என்று கலை கட்டிக் கொண்டிருக்கிறது பதிவுலகம். அவ்வப்போது போட்டிகள் நடத்தி உற்சாகம் அளித்து வரும் பதிவர்கள், நட்பு சார் எழுத்துக்கள், தப்பான கருத்தென்றால் சுட்டி காட்ட தயங்காமை என்ற பல கோணங்களில் கொடி கட்டி பறந்து வருகிறது பதிவுலகம். புதிதாக வரும் பதிவர்களுக்கு நான் அறிவுரை சொல்ல முடியாது! சொல்லவும் கூடாது, ஆனால் என்னக் கவர்ந்த வரிகளை சொல்கிறேன் இங்கே, "முயலும் வெல்லும், ஆமையும் வெல்லும், ஆனால் முயலாமை வெல்லாது". இந்த வரிகளப் போல் பதிவுலகத்தில் வெற்றி, தோல்வி என்றெல்லாம் வார்த்தைகள் கிடையாது. கருத்து, மாற்றுக்கருத்து மட்டுமே உண்டு என்பது என்னுடைய சித்தாந்தம்.

எனக்கு இது வரை தொடர் ஆதரவு அளித்து வரும் அனைத்து பதிவர்களுக்கும் நண்பர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாருங்கள் ஒரு நல்ல எழுத்து சூழலை அடுத்த தலைமுறையினருக்கு உருவாக்கிக் கொடுப்போம். வளர்க பதிவர்கள், வாழ்க பதிவுலகம், பரவுக பதிவுலக எழுத்துக்கள்!!!

- காவிரிக்கரையோன் MJV

10 comments:

அண்ணாமலையான் said...

வாழ்த்துக்கள்....

Sangkavi said...

உங்கள் 100க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

இராகவன் நைஜிரியா said...

செஞ்சுரி அடித்ததற்கு வாழ்த்துகள்.

இந்த இடுகை ரொம்ப அருமையா இருக்கு.

மேன் மேலும் வளர வாழ்த்துகள்.

SUREஷ் (பழனியிலிருந்து) said...

வாழ்த்துக்கள்

புலவன் புலிகேசி said...

வாழ்த்துக்கள்....

மயில்ராவணன் said...

வாழ்த்துக்கள் நண்பரே.

தேவன் மாயம் said...

உங்கள் முதல் 100 தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

Mehar said...

Hello Friend,  Hope everything is fine.
I am a researcher from psychology department. Interested in bloggers, mail users, and their behavior. My  research topic is "Bloggers, Internet users and their intelligence".  In connection with my research I need your help.  If you spare your time, I will be sending  the research questionnaire's to your mail Id.   You can give your responses to the questionnaire.  My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose.  Please reply. Thank you

 
Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore - 641046
Tamil Nadu, India
meharun@gmail.com
.
 
 
(Pls ignore if you get this mail already)

பா.ராஜாராம் said...

veri good!

வாழ்த்துக்கள் காவிரி!

காவிரிக்கரையோன் MJV said...

@ அண்ணாமலையான் - வாங்க அண்ணாமலையான். வருகைக்கும் உற்சாகத்திற்கும் நன்றி.
@ sangkavi - வாங்க sangkavi . வருகைக்கும் உற்சாகத்திற்கும் நன்றி,
@ இராகவன் நைஜிரியா - வாங்க இராகவன். வெகு நாள் கழித்து வந்துள்ளீர்கள். வருகைக்கும் உற்சாகத்திற்கும் நன்றி.
@ sure ஷ் - வாங்க சுரேஷ். வருகைக்கும் உற்சாகத்திற்கும் நன்றி.
@ புலவன் புலிகேசி - வாங்க புலி. வருகைக்கும் உற்சாகத்திற்கும் நன்றி,
@ மயில்ராவணன் - வாங்க மயில். வருகைக்கும் உற்சாகத்திற்கும் நன்றி.
@ தேவன் மாயம் - வாங்க தேவன் மாயம் சார். வருகைக்கும் உற்சாகத்திற்கும் நன்றி.
@ பா.ரா - வாங்க பா.ரா. வருகைக்கும் உற்சாகத்திற்கும் நன்றி.