Sunday, March 7, 2010

மழலைக் கவிதைகள்...

நித்திரை
மூன்று நான்கு மணி நேரங்கள்
போராடி நிலவையும், புலியையும்
காட்டு ராஜாவையும் கட்டிலுக்கு பக்கமாய்
அமரவைத்து மிரட்டி,
எனக்கே பிடிக்காத என் குரலில் ஓர் பாடல் இசைக்க,
அத்தனைக்கும் தலையசைத்து அன்பு தேவதை
தூங்கியிருக்கும் நேரம், ஐந்து நொடி குரைப்பில்
மீண்டும் அவளை எழுப்பி விட்ட நாயின்
மேல் தான் எனக்கு கோபம், உச்சக்கட்ட கோபம்!
மீண்டும் சிங்கம், மீண்டும் புலி!!!!!

காலும் கையும்
காரின் திசைச்சக்கரத்தில் பொட்டு
நடுநாயகமாய் அமர,
ஊர்ந்து வந்த எறும்புகள் தீனி பார்த்து
சாளரம் வழி ஏற,
இருக்கைகள் வண்ணப் பக்கங்களாய்
வடிவுக்கு வர,
இருக்கைக்கு அடியில் உடைபட்ட சில
உருவங்களும், காலும் கையும் கிடைக்க,
உச்சாணி கோபத்தில் நான் கத்துவதில்லை,
இப்பொழுதெல்லாம் எங்கள்
குட்டி தேவதை காரில் பயணிக்கிறாள்!!!

- காவிரிக்கரையோன் MJV

6 comments:

பா.ராஜாராம் said...

ரெண்டுமே நல்லாருக்கு காவிரி.

சி. கருணாகரசு said...

இரண்டு கவிதைகளும் மிக அழகு... பாராட்டுக்கள்.

காவிரிக்கரையோன் MJV said...

@ பா.ராஜாராம் - வாங்க பா.ரா. வருகைக்கும் உற்சாகத்திற்கும் நன்றி.
@ சி. கருணாகரசு - வாங்க கருணாகரசு. வருகைக்கும் உற்சாகத்திற்கும் நன்றி.

சே.குமார் said...

ரெண்டுமே மிக அழகு... பாராட்டுக்கள்

vidivelli said...

ரசித்தேன்........
அருமை........அருமை........

புதிய அபிமானி.........
நம்ம பக்கமும் வாங்க........

வழிப்போக்கன் said...

சிங்கம் புலி சூப்பர். அருமையான வார்த்தை கோர்ப்புகள்.