Saturday, March 20, 2010

பழமொழி...

பழமொழி...
இரு மணம் இணையும்
திருமணம் ஆயிரம் காலத்து
பயிர் என்று மணப்பெண்ணையும்
மணமகனையும் இணைத்த பல
பயிரடல்களுக்கு, உரமானது நீங்கள்
வெட்டி எறிந்த காதல் தான் என்பதை
எப்பொழுதாவது உணர்ந்ததுண்டா
பழமொழி தயாரிப்பாளர்களே?

பாட்டிக்கதை
அம்மாவின் அரவணைப்பிலும் அப்பாவின்
பாடல்களிலும், கொஞ்சல்களிலும்
கெஞ்சல்களிலும், தொட்டிலின் ஆட்டத்திலும்
வந்து எட்டி பார்க்காத உறக்கத்தை
பல சமயங்களில் அசராமல்
கொடுத்து செல்லும் பாட்டியின் கதைகள்!

ஆந்தை குணம்
இல்லாத காத்துக் கருப்புக்கு விளம்பரம்
செய்தே வாழ்கிறவர்களும், இருளில் எப்படியும்
ஏதேனும் ஓர் உருவம் இருந்தே தீரும்
என்று வாய்க்கு வந்தபடி பேசுபவர்களும்
ஆந்தை இனத்தில் இருக்க மாட்டார்களோ?
ஆந்தைகள் பலவிதம் அனைத்திற்கும் ஒரே குணம்
இருளுக்கு அச்சம் தவிர்க்கும் குணம்...

- காவிரிக்கரையோன் MJV

4 comments:

Madurai Saravanan said...

அருமை. வாழ்த்துக்கள்.

காவிரிக்கரையோன் MJV said...

@ Madurai saravanan - வாங்க சரவணன். வருகைக்கும் உற்சாகத்திற்கும் நன்றி.

திகழ் said...

/பாட்டிக்கதை
அம்மாவின் அரவணைப்பிலும் அப்பாவின்
பாடல்களிலும், கொஞ்சல்களிலும்
கெஞ்சல்களிலும், தொட்டிலின் ஆட்டத்திலும்
வந்து எட்டி பார்க்காத உறக்கத்தை
பல சமயங்களில் அசராமல்
கொடுத்து செல்லும் பாட்டியின் கதைகள்!/

அருமை

காவிரிக்கரையோன் MJV said...

வாருங்கள் திகழ். வருகைக்கும் உற்சாகத்திற்கும் நன்றி,,,