Sunday, March 7, 2010

தெளிய வைக்கும் ஒரு துளி!

பலாப்பழத் தோலினுள் அமர்ந்திருப்பதுதான்
கனி ரசமூறும் பலாச்சுளையின்
வெற்றி ரகசியம்,

இன்பத்தின் திறவுகோல் நிலைதான்
துன்பங்களின் அணிவகுப்பும் என்பது
கானல் நீராய் மறையும் மாயை அல்ல,

உவமைகளின் உருவம் உணர்வாக போனதற்கு
வருத்தமுண்டு எனில் உணர்வில் உவமை தோய்த்த
உண்மைக்கும் வருத்தமும் கோபமும் உண்டா?

துவண்டு போன நிலைமையில் எறும்பு கூட
இருந்ததில்லை, பிரித்து விட்ட நேர்கோட்டுப்
பயணங்களில் மீண்டும் சேர்ந்திருக்கும் அத்தனை
எறும்புகளுக்கு தொலைவதில்லையே ஏன்?

கொலை தான் கொள்ளைதான் மாண்டார்கள் தான்
இருந்தும் தளர்ந்து போயிருப்பின்
முஹம்மது கஜினிக்கு புத்தகத்தில் காலியிடமே,

துவளும் போதும் சூரியக் கதிர்கள்
கண்டால் தலை நிமிரும் வகை
பூக்கள் நம்பிக்கைச் சின்னங்கள்,

கடல் சோகம் மறைத்து அதில் துளி
நம்பிக்கை கலந்து பார்ப்போம்
அதில் தெளியப் போவது நம் வாழ்க்கைதான்!!!

- காவிரிக்கரையோன் MJV

3 comments:

அக்கினிச் சித்தன் said...

நல்ல பார்வை. இவ்விடத்தில் குறளொன்று நினைவுக்கு வந்தது: இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் துன்பம் உறுதல் இலன். என்ன தெளிவா இருக்கு!

புலவன் புலிகேசி said...

//இன்பத்தின் திறவுகோல் நிலைதான்
துன்பங்களின் அணிவகுப்பும் என்பது
கானல் நீராய் மறையும் மாயை அல்ல,//

சூப்பர்...

காவிரிக்கரையோன் MJV said...

@ அக்கினிச் சித்தன் - வாங்க அக்கினிச் சித்தன். முதன் முறையா வந்திருக்கீங்க. ஆம் நீங்கள் சொன்னாவுடன் யோசித்து பார்க்கையில் நீங்கள் சொன்ன குறள் அப்படியே பொருந்தி நிற்கிறது. பொருட்பால், இடுக்கணழியாமை அதிகாரத்தில் வருகின்ற குறள் அல்லவா இது,. வருகைக்கும் உற்சாகத்திற்கும் நன்றி,. ஐயன் வள்ளுவன் சொல்லாததையா நாமெல்லாம் சொல்லிவிடப் போகிறோம் என்பதற்கான உதாரணம் இது!!!!


@ புலவன் புலிகேசி - வாங்க புலி. வருகைக்கும் உற்சாகத்திற்கும் நன்றி. உங்கள் தரியலை இன்னும் படிக்கவில்லை. படித்து விட்டு சொல்லுகிறேன்!