Sunday, March 21, 2010

கை நாட்டு?

படித்து படித்து பத்துக்கும்
மேற்பட்ட பட்டங்கள் உண்டு என்
பெயருக்கு பின்னால்,

மெத்தப் படித்ததால் கர்வச்
சுவடுகள் எட்டிப் பார்ப்பதுண்டு
அவ்வப்போது,

வீட்டுப் பத்திரம் ஒன்றை பதிந்த போது,
கை நாட்டு வைங்க சார்
என்ற அதிகாரியைப் பார்க்காமல்

சிரித்துக் கொண்டே கையெழுத்து போடத்
தெரியும் சார் என்றபடி பேனா எடுக்க,
இருக்கட்டும் சார் இங்க கை நாட்டு மொதல்ல
அப்புறம் தான் பேனா என்றார்,

நேற்று தடுமாறி விளாசம் கேட்ட ஒருவரிடம்
கை நாட்டா நீங்க என்று கேட்டு விட்டு
பதில் சொன்னது ஏனோ நினைவுக்கு வந்து சென்றது!

- காவிரிக்கரையோன் MJV

2 comments:

Madurai Saravanan said...

கை நாட்டு கவிதை நாட்டும் உன் புகழ். வாழ்த்துக்கிறேன்.

காவிரிக்கரையோன் MJV said...

சரவணன் உங்கள் வருகைக்கும் உற்சாகத்திற்கும் நன்றி.