என் இனிய காதலியே
வைரமென மின்னும் உன் கண்களில்
நான் காணாமல் போகிறேனே, ஏதேனும்
வழி உண்டா என்னை காப்பாற்ற? உயிர் பணையம்
வைத்து உன்னை கடல் தாண்டி கடத்தி, மனம் சேர
மணந்து கொள்கிறேன், என் இனிய காதலியே...
அந்த கால காதல் கவிதை,
என் இனிய காதலியே
உன் எண்ணம் சொல், பேஸ்புக்கில்
அதை உலகெங்கும் அறிவிப்பேன் , ஆர்குட்டில்
உன் பிறந்த தினம் கொண்டாடுவேன், ட்விட்டரில்
உன்னை பறந்து பறந்து காதலிப்பேன், எண்ணம்
சொல்லடி என் தலை அடகு வைத்தாவது உனக்கு
ஒரு கிலோ வெங்காயம் வாங்கி தருகிறேன், எனக்கு
உன் எண்ணம் சொல்லடி!!!!
இந்த கால காதல் கவிதை.....
- MJV
No comments:
Post a Comment