Friday, April 8, 2011

பார்க்கலாம்....

கசங்கல்
பத்து முறை கசங்கல் களைந்து முடிந்து
வைக்கப்பட்ட அந்த பணத்தாளுக்கும்
தெரியாது, வைத்திருந்த அந்த அம்மாளுக்கும்
தெரியாது,

தெரு முனையில் வந்திருக்கும்
காக்கி சட்டைப் பையில் தான் அதற்கு புது
சுவாசம் என்று, நடைபாதை கடையின் முதலாளிகள்
கூட தொழிலாளிகள் தான்....

பார்க்கலாம்....
உங்கள் பழம்பெருமை எங்களுக்கு தெரியாதா
முழு பலாவை சோற்றில் அமுக்கி விட்டு
காக்காவின் வாயை பாருங்கள் என்பீர்கள்,

உங்களை வேரறுக்க தான் இன்னுமொரு அண்ணா
வந்திருக்கிறார்,
உங்கள் பழம்பெருமை பேசி பேசி அந்த மனிதனை
மண்ணோடு மரிக்க வைக்காதீர்கள்,

இன்று இல்லையென்றால் நாளை
மே பதின்மூன்று வரை வேண்டாம்
இந்நேரம் பார்த்திருப்பீர்களே கூகிளாரிடம்
பிச்சை கேட்டு,

உயிரோடு எத்தனை நாள் இருக்கலாம்
உண்ணா விரதம் இருந்தால் என்று,
வேண்டாம் இந்த அண்ணா மூட்டிய கனல்
பூகோள எல்லைகள் தாண்டி புறப்பட்டு இருக்கிறதாம்,

முடிந்தால் பயந்து ஒளிந்து கொள்ளுங்கள்
இல்லையென்றால் பயத்தில் உங்கள் பணப்பைகளை
சுருட்டி கொண்டு எல்லை தாண்டி ஓடி விடுங்கள்,

பார்க்கலாம் நாடு தாண்டி போய் அடுத்து எந்த நாட்டில்
ஆரம்பிப்பீர்கள் உங்கள் சித்து விளையாட்டை என்று,
என்ன இருக்கிறது சுவிஸ் என்பீர்கள்,

இது சட்டப்பேய்களை சவுக்கால் அடித்து மரத்தில்
ஆணி கட்டி வைக்கும் நேரம், ஊர்பட்ட சுனாமிகள்
எழுந்திருக்கிறது, பார்க்கலாம் என்னதான்
செய்வீர்கள் என்று.....

- காவிரிக்கரையோன் MJV

2 comments:

vidivelli said...

நல்லாயிருக்குங்க.....................





...நம்ம பக்கமும் வாங்க..............

மணிவானதி said...

நல்ல கவிதை. மிக நேர்த்தியான கவிதைகளை வெளியிட்டுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

அன்புடன்
முனைவர் துரை.மணிகண்டன்.